பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 படமும் விக்கிரகங்களும்

赫幅 இன்று உங்களை மிகவும் வியப்பு அடையக்கூடிய ஒர் இடத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்' என்ருர் இராமசாமி.

"ஒவ்வொரு நாளும் காங்கள் காணும் காட்சிகள் வியப் பின்மேல் வியப்பைத் தந்து கொண்டே இருக்கின்றன. இன்று எந்த இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த வியப் பைக் காட்டப் போகிறீர்கள்?' என்று கேட்டேன்.

"கான் கட்டடங்களையோ காட்சிச் சாலைகளையோ காட்டப்போவதில்லை. மனிதர்களைக் காட்டப் போகிறேன்." "அப்படியா? அப்படியானல் நீங்கள் காட்டப் போகும் அதிசய மனிதர்கள் எப்படி இருப்பார்கள்?"

"அவர்களும் பிரெஞ்சுக்காரர்களே! நீங்களே பார்க்கப் போகிறீர்கள். அவர்களைப் பார்ப்பதற்குத் திரு மீனாட்சி சுந்தரருைம் வருவதாகச் சொன்னர். போகும் வழியில் அவரைச் சந்திக்கலாம். அவரையும் அழைத்துக்கொண்டு போவோம்.' - .

நானும் அன்பர் திரு சா. கணேசனும் இராமசாமியுடன் புறப்பட்டோம். இடை வழியில் திரு தெ. பொ. மீ.யும் சேர்ந்துகொண்டார். இராமசாமி எங்களை ஒரு சிறிய மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்ருர். மார்செல் பேனர்ட் (Marcel Benard) என்பவர் அந்தக் கடையின் சொந்தக்காரர். அவருடைய மனைவி ரீமதி காப்ரியல் பேர்ைடும் (Gabrialle Benard) அங்கே இருந்தார். எங்க