பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹本2 கண்டறியாதன் கண்டேன்

மைகேல் தெய்வ வடிவம். கடவுள் அதர்மத்தை மாய்த்து அறத்தை நிலைநிறுத்துகிருர் என்பதையே அவர் அந்தத் திருவுருவத்தில் காண்கிருர் அவதாரம் எடுப்பதே அதற் இத்தான் என்று கண்ணன் கீதையில் அருளவில்லையா ?

ஸெயிண்ட் மைகேலின் திருவுருவத்திலும் நடராசப் பெருமான் திருக்கோலத்திலும் ஒரு பொதுமையைக் காண் கிருர் பேர்ைட் காலின் கீழே முயலகனை மிதித்து கடமிடும் ஆண்டவன். கையால் அபயவரத முத்திரைகளைக் காட்டு கிருன். 'என்ன நம்பு. நான் அதர்மத்தை அடக்கி ஒழிப்பவன். அஞ்சாதே. அருள் புரிவேன்' என்று அவன் சொல்லாமல் சொல்கிருன். அதர்மத்தையே நடராசன் திருவடியின்கீழ் முயலகனகவும், ஸெயிண்ட் மைகேலின் பாதத்தின்கீழ் விலங்காகவும் காண்கிருர் பேனர்டு. அவருடைய தியானமூர்த்தி சிவபெருமான்: இளமையில் ஆட்கொண்ட மூர்த்தி செயிண்ட் மைகேல். இருவரையும் இணைத்து நோக்கும் சமரச உணர்வு அவரிடம் இருக்கிறது. இக்கு உணர்வில்ைதான் அவர் எல்லா மூர்த்திகளின் படங்களையும் வைத்து வணங்கி வருகிரு.ர்.

அவர் பிறந்த ரீயூனியன் தீவில் பழங்காலத்தில் மிகவும் இல மக்களே வாழ்ந்தார்கள். 1700ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல நாடுகளிலிருந்தும் பலர் வந்து அங்கே தங்கி வாழத் தலைப்பட்டார்கள். அப்படி வந்தவர்களில் இந்தியர்களும் பலர். அவர்களில் பெரும்பாலோர் மலேயா வித்திலிருந்து போனவர்கள். அவர்கள் தமிழ் பேசினர்கள். அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாகவும் கல்லவர்களாக வும் இருந்தார்கள். சிவபெருமான வழிபட்டார்கள். தீவிலுள்ள மற்ற மக்கள் அவர்களிடம் மிகவும் ஈடுபட் -ார்கள். அவர்கள் சிவபிரானுக்கும் திருமாலுக்கும் கோயில்களைக் கட்டினர்கள்.

ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் அருள் புரிய வேண்டும் என்று இந்த இந்துக்கள் சிவபெருமானப் போற்றிப் பிரார்த்தன. செய்தார்கள். தங்கள் பிரார்த்தனை