பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரிவலில் தமிழ் நூல்கள்

அன்றுதான் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கின் இறுதி நாள் (18-1-1970). அன்று காலையில்தான் தியானம் செய்யும் மருந்துக் கடைக்காரரைப் பார்த்தேன். அவரைப் பற்றிய எண்ணம் என் உள்ளம் முழுவதும் படர்ந்திருந்தது.

அன்று காலையில் இக்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. டாக்டர் மு. வரத ராசனர் தலைமை தாங்கினர். இங்கிலாந்தைச் சேர்ந்த திரு ஆஷர் என்பவர் இக்காலத்தில் வளர்ந்து வரும் தமிழ் இலக்கிய வகைகளேப் பற்றிப் பேசினர். அவருடைய பேச்சி லிருந்து, மூல நூல்களைப் படிக்காமல், யாரோ சிலர் எழுதிய விமரிசனங்களைப் படித்துவிட்டுப் பேசுகிருர் என்று தெரிந்தது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகிய வற்றைப்பற்றிச் சொன்னர். அவருக்குப் பின் திரு வி. எம். ஞானப்பிரகாச அடிகள் பேசினர். 1969ஆம் ஆண்டில் வெளியான பத்திரிகைகள் சிலவற்றைப்பற்றிய திறய்ைவு அது. அவர் சென்னையில் லயோலாக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர். தம்முடைய மாணுக்கர்கள் தொகுத்த புள்ளி விவரங்களே வைத்துக்கொண்டு செய்த ஆராய்ச்சியின் பயனக அவர் தம் ஆராய்ச்சி யுரையை உருவாக்கியிருந்தார். நாளிதழ்களின் போக்கைப்பற்றிச் சொன்னர். ஆனந்த விகடன், கல்கி, குமுதம், தினமணி. கதிர், கலைமகள், தீபம், மஞ்சரி ஆகிய பத்திரிகைகளில் வந்த நாவல்கள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றை ஆராய்ந்து, எந்த எந்தப் போக்கில் அவை அமைந்தன்