பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 காந்தி பக்தர்கள்

ஒரு நாள் இரவு அன்பர் இராமசாமி என்னயும் திரு சா. கணேசனயும் ஓர் இல்லத்துக்கு அழைத்துச் சென்ருர். அந்த இல்லத்தைப் பற்றி இராமசாமி முன்பே சொல்லி யிருந்தார். காந்தி பக்தர்கள் சிலர் சர்வோதயக் கொள்கை யின்படி வாழ்கிருர்கள் என்றும், அவர்களே ஒரு நாள் பார்க் கலாம் என்றும் எங்கள் ஆவலைத் தூண்டியிருந்தார். காங்கள் வர எண்ணியிருப்பதை அறிந்து அந்த இல்லத்தி லுள்ள பெண்மணி ஒருவர், நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து தம்முடைய காரில் எங்களே அழைத்துக் கொண்டு சென்ருர் (20-7-70).

அந்த இல்லம் ரூ ரேமான் என்ற தெருவில் இருக்கிறது. சாதாரண வீடு. அங்கே படாடோபமோ விளம்பரமோ ஏதும் இல்லை. அஹிம்சையையே தங்களுடைய அடிப் படைக் கொள்கையாக வைத்துக்கொண்டு, அதன்படி வாழ. வேண்டுமென்ற உறுதியோடு இருக்கும் ஆண்களையும் பெண்களையும் அங்கே பார்த்தேன்.

பிரான்சு நாட்டில் அஹிம்சையைத் தங்கள் குறிக் கோளாகக் கொண்டு சமூகசேவை செய்து வரும் இயக்கம் ஒன்று இருக்கிறது. "கொம்யூனெதெ. த லார்வு (Com. manate de L'Arche) என்பது அந்தக் குழுவுக்குப் பெயர். சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக அந்தக் குழு இயங்கி வருகிறது.

உலகம் முழுவதும் புதிய புதிய படைக்கலன்களே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிருர்கள்.