பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கண்டறியாதன கண்டேன்

தொண்டு புரிகிருர்கள், அவர்களில் ஒருவர் இங்குள்ள நூலகத்தைக் கவனித்துக்கொள்கிருர்; புத்தகங்களைக் கொடுத்து வாங்கும் பணியை அவர் மேற்கொண்டிருக்கிரு.ர். அஹிம்சையைப் போதிக்கும் நூல்கள் பல இங்கே உள்ளன. மற்ருெருவர் நாற்றல், நெய்தல், தைத்தல் முதலிய தொண்டுகளைச் செய்து வருகிருர். கம்பளி நூலே நூற்றல், கம்பளி ஆடைகளே நெய்தல் ஆகிய காரியங்களும் இங்கே. நடைபெறுகின்றன. இங்குள்ளவர்கள் ஆடைகளை வெளி யிலே தைப்பதில்லை; இங்கேயே தைத்துக்கொள்கிருர்கள். நெசவுத் தொழிலில் வல்ல ஒரு பெண்மணி இங்கே இருக்கிருர். இராட்டைகள், கைத்தறி ஆகியவற்றை வைத்திருக்கும் இடத்தை எங்களுக்குக் காட்டினர்கள். காந்தியடிகளின் கொள்கையில் இவர்களுக்கு உள்ள பற்றே இந்தத் தொழிலில் இவர்களே ஈடுபடச் செய்தது. தொழில் வளம் இல்லாத காடுகளில் உள்ள ஏழைகளுக்குச் சர்க்காவும் கைத்தறியும் பெரிய வரப்பிரசாதம் என்று இவர்கள் உறுதியாக நம்புகிருர்கள். நம்முடைய நாட்டிலோ நமக்கு, அதில் சிறிதும் கம்பிக்கை இல்லை. முன்பு கொஞ்சநஞ்சம் நம்பிக்கை இருந்தவர்களும் அதை இப்போது இழந்து வருகிருர்கள். -

இவர்கள் பிரார்த்தனை செய்கிருர்கள். அவரவர்கள் தம் விருப்பப்படி தமக்கு ஏற்ற சமயக் கொள்கைகளை மேற்கொள்ளலாம். ஆனல் அஹிம்சைக் கொள்கை இன்றி யமையாதது. பிரார்த்தனைசெய்யும் வழக்கமுடையவர்கள் காலையில் பணி செய்யப் போகுமுன் ஒன்று கூடிப் பிரார்த்தனை செய்கிருர்கள். கடவுள் நம்பிக்கையும் ஒரு வருக்கொருவர் காட்டும் அன்பும் இரண்டு மூச்சாக வாழும் வாழ்க்கை இவர்கள் வாழ்க்கை.

பாயில் உட்கார்ந்தபடியே நாங்கள் உரையாடிளுேம். எங்களுக்கு ரொட்டி, பழம், தயிர் முதலியவற்றை, வழங்கினர்கள்.

இவர்களில் சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை. இந்தியாவுக்கு வருகிருர்கள். சிக்கனமாக வாழும் இவர்கள்