பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகுத் திருமாளிகை 163

சொல்கிருேம். அவர்கள் தங்களுடைய மொழிக்கேற்ற வகையில் உச்சரிக்கிருர்கள். அவர்கள் ஊரில் உள்ளதை அவர்கள் எப்படிச் சொல்கிருர்களோ அப்படிச் சொல்வது. தானே முறை? நாங்கள் வர்ஸே போனேம். அது பாரி நகரிலிருந்து 13 மைல் தூரத்தில் இருக்கிறது. எங்களை அழகான பஸ்ஸில் ஏற்றிச் சென்று வரவும் அங்கே உணவு வழங்கவும் ஏற்பாடுகளைப் பிரெஞ்சு அரசினர் செய்திருக் தார்கள்.

பிரெஞ்சு தேசம் முடியாட்சியின்கீழ் இருந்த காலத்தில் இந்த அழகு மாளிகை உருவாயிற்று. 1789ஆம் ஆண்டில் அந்த நாட்டில் பெரும் புரட்சி நிகழ்ந்தபோது புரட்சிக் காரர்கள் இந்த மாளிகையைக் குலைத்து மன்னரையும் கொன்ருர்கள். குடியரசு வந்த பிறகு மீண்டும் இந்தக் கலைக் கோயிலே ஓரளவு பழையபடி அமைத்து யாவரும் கண்டு களிக்கும்படி வைத்திருக்கிருர்கள்.

இங்கே ஒரு சிறு குன்றும் அதைச் சுற்றிச் சதுப்பு கிலமும் காடுகளும் இருந்தன. மன்னர்கள் இங்கே வேட்டை யாட வருவார்கள். பதின்மூன்ருவது லூயி மன்னன் இங்கே வேட்டையாட வந்தபோது ஒரு சிறிய வேட்டை இல்லத் தைக் கட்டச் செய்தான். 1923ஆம் ஆண்டில் அந்த இல்லம் உருவாயிற்று. அதன் பிறகு அதுவே சில காலம் தங்குவதற்கேற்ற மாளிகை ஆயிற்று.

14ஆவது லூயி மன்னன் 1661ஆம் ஆண்டில் ஆட்சி பீடத்தில் ஏறின்ை. அந்த மன்னன் இதை விரிவுபடுத்திப் பூங்காவையும் ஊற்றுக்களையும் அமைத்துப் பெரிய அரண் மனயாக்க எண்ணினன். கலேவல்லுநர்களாகிய சிற்பிகள் அந்த வேலையைத் தொடங்கினர். இரண்டு மூன்று தலைமுறைகளில் தொடர்ந்து வேலை கடந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது வந்த மன்னர்கள் வெவ்வேறு பகுதிகளைக் கட்டி அழகுபடுத்தினர். ஐம்பது ஆண்டுகள் இந்த அரண்மனை வளர்ந்து முழு வடிவத்தைப்பெற்றது. 14ஆவது ஆாயி. 15ஆவது இாயி, 16ஆவது லூயி