பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கண்டறியாதன கண்டேன்

மன்னர்கள் இந்த அழகுத் திருமாளிகையில் வாழ்ந்தார்கள். 16ஆவது லூயி மன்னர் இந்த அரண்மனையிலேயே கொல்லப்பட்டார். மனத்தையும் மரணத்தையும் அவர் அநுபவிக்கும் இடமாக இந்த மாளிகை ஆயிற்று. அவருக் குப்பின் பிரெஞ்சு வரலாற்றிலே பெரிய திருப்பம் எற்பட்டு விட்டது.

அந்தக் காலத்தில் இந்த அரண்மனையும் இதைச் சார்ந்த இடங்களும் ஆருயிரம் ஏக்கர்ப் பரப்பில் அமைக் திருந்தன. இப்போது, 2,030 ஏக்கரில் இருக்கின்றன. இப்போதுள்ள பிரம்மாண்டமான அமைப்பே மூக்கில் விரல் வைக்கும்படி உள்ளது. 67 படிக்கட்டுகள் வெவ்: வேறு இடத்தில் இருக்கின்றன. 2133 ஜன்னல்கள்: கண்ணுடிக் கூடம் என்ற இடத்தில் 408 கண்ணுடிகள். 1145 விதமான பளிங்குக் கற்கள் இந்த அரண்மனையை, உருவாக்கப் பயன்பட்டன.

இங்குள்ள பந்தியில் 2400 குதிரைகளும் 250 கோச்சு களும் இருந்தன. அரசனுடைய உணவைச் சமைத்துப் பரிமாறும் துறையில் 368 பேர் வேலை செய்தார்களாம்!

காங்கள் இந்த அரண்மனைக்குப் போய் அண்ணுந்து பார்த்தோம். இங்குள்ள பகுதிகளேச் சும்மா பார்த்துக் கொண்டே போனல் சுவை இருக்குமா? அவற்றைப் பற்றி விளக்கம் கூற யாராவது வேண்டாமா? ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் விளக்கஞ் சொல்லி அழைத்துச் செல்லும் உதவியாளர்கள் அங்கே இருக்கிருர்கள். ஆங்கிலத்தில் விளக்கம் கூறும் ஒரு பெண்மணி எங்களுக்குக் கிடைத்தார். அவர் பிரெஞ்சு காட்டவரானலும் மிக நன்முக ஆங்கிலம் பேசினர். ஆக்ஸ் போர்டு யூனிவர்ஸிடியில் படித்தவராம். அரண்மனையின் வரலாற்றையும் அங்கே கிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவர் சொல்லி வரும்போது கோவையாகவும் சுவையாகவும் இருந்தது. காங்கள் கண்ணில் கண்ட ஒவியங்களை விளக்க