பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கண்டறியாதன கண்டேன்

எங்களுக்குப் பிரமிப்பை ஊட்டும்படி பீடிகை போட்டுச் சொன்னர். பாட்டியிடம் சின்னக் குழந்தைகள் ஆவலோடு கதை கேட்குமே, அப்படி அவர் சொன்னதை நாங்கள் கேட்டோம்.

ராணி எலிஸபெத் இங்கே வந்து நடனமாடியிருக் கிரு.ராம், அமெரிக்க ஜனதிபதி கென்னடி இங்கே வந்திருக் கிருராம். 1789ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சியில் புரட்சிக்காரர்கள் இந்த அரண்மனையைத் தகர்த்தார்கள். ஓவியங்களே அழித்தார்கள். அரச குடும்பத்தைக் கொலை செய்தார்கள். இரத்தத்தின் சிவப்புப் போதாதென்று எங்கும் சிவப்பு வண்ணத்தை அடித்தார்கள். அதன் பிறகு 1855 இல் நெப்போலியன் வந்தான். மறுபடியும் 1870இல் மற்ருெரு புரட்சி வந்தது. பிறகு குடியரசாட்சி வந்து விட்டது. - - х

முகப்பிலே நுழைந்தால் அடுத்து வழிபாட்டுக் கூடம் இருக்கிறது. பிறகு பல பல அறைகள்: அல்ல அல்ல, கலையரங்கங்கள். ஹெர்க்குலிஸ் சேம்பர், வீனஸ் (வெள்ளி) சேம்பர் முதலிய பல பகுதிகள் அங்கே இருக்கின்றன. காணும்போது கண்ணையும் கருத்தையும் பறித்த அவற்றை யெல்லாம் இப்போது கினேவுக்குக் கொண்டு வந்து சொல்ல இந்தச் சிறிய மனத்துக்கு ஆற்றல் ஏது? அப்படிச் சொன் லுைம் கேரே அநுபவித்தாலல்லாமல் அவற்றின் அருமைப் பாட்டைத் தெரிந்து கொள்ள முடியுமா?

வீனஸ் சேம்பரில் (வெள்ளியின் அறை) அட்லாண்டா என்ற பெண் ஒவியம் ஒன்று இருக்கிறது. சிறிது தூரத்தி லிருந்து பார்த்தால் அங்கே ஒரு பளிங்குச் சில உருவம் கிற்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அருகில் சென்ருல் சுவரில் எழுதிய ஓவியம்! ஒளியும் கிழலும் இந்த அற்புதத்தை உண்டாக்குகின்றன.

புதன் சேம்பரில் ஒரு கடிகாரம் இருக்கிறது. சாவி கொடுக்காமலே இரண்டாயிரம் வருஷம் அது ஒடுமாம். பல ஆண்டுகளாக அது ஒடிக்கொண்டிருக்கிறது. அண்ட்டான்