பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பிரியா விடை

பாரிஸ் மாநகரத்தில் எங்கே சென்ருலும் அங்கு வீன் கதியை அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும்; பல சமயங் களில் அதனேடே போக வேண்டியிருக்கும்; பல சமயங்களில் அதைக் கடந்து செல்வோம். பாரிஸ் நகரத்தின் வாழ்க்கையோடும் வரலாற்ருேடும் இணந்த ஆறு அது. அது எத்தனையோ புரட்சிகளைக் கண்டிருக் கிறது. அதில் குருதி வெள்ளம் ஓடியிருக்கிறது. தலைகள் மிதந்திருக்கின்றன. இன்று பாரிஸின் நாகரிக அமைப்புக் களே, கலை மாளிகைகளே இருமருங்கும் கொண்டு நகரத்தின் நடுவே எஸ் (S) என்ற எழுத்தின் வடிவில் ஒடுகிறது. பல வகையான ஒடங்களும் படகுகளும் சிறிய கப்பல்களும் நீர் மாளிகைகளும் அதன் திருமேனியில் காட்சி அளிக்கின்றன. நகரத்து வீதிகளில் நிலையான மாளிகைகள் இருக்கின்றன: வாகனங்கள் ஒடுகின்றன. நகரத்தின் நடுவே வளைந்து செல்லும் ஸின் ஆறும் ஒரு பெரிய சாலேதான். ஆனல் அதில் ஒடங்கள் ஒடுகின்றன; மாளிகைகள் மிதக் கின்றன. இரவு நேரத்தில் படகுகளில் அதன் வழியே சென்ருல் இருமருங்கும் உள்ள பல அரிய இடங்களைப் பார்க்கலாம். வெனிஸிலும் காஷ்மீரிலும் நீரில் மிதக்கும் இல்லங்கள் (Boat houses) இருக்கின்றன. வீன் நதியிலும் அத்தகைய இல்லங்கள் சில உண்டு. ஒரு மாளிகையில் கிடைக்கும் வசதிகளையெல்லாம் அங்கே காணலாம்.

ஹம்ஸா என்ற படகுவீட்டைப் பற்றிக் கேள்வி புற்றேன். அந்தப் பெயர் கம் காட்டுப் பெயர்போல இருக்