பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியா விடை 173.

இடுக்கிக் கொண்டிருக்கிருன். அந்த முருகனத் தரிசித்துப் பல பாடல்களைப் பாடியிருக்கிறேன். பாரிஸ் மாநகரத்தில் மூவி கெமெயில் உள்ள இளமுருகனும் முடித்த கொண்டை. யும் இடுக்கிய கோழியும் உடையவனாக கின்ருன். இந்தியாவில் எந்த ஊர்க் கோயிலில் அந்த விக்கிரகம்: இருந்ததோ? யார் கொண்டு வந்தார்களோ?

மறு நாள் (21-7-70) பாரிஸை விட்டு லண்டன் மா. ககருக்குப் புறப்படுவதாக ஏற்பாடு. எங்கள் விமான டிக்கட்டை லண்டன் வரைக்கும் செல்லப் பயன்படும்படி கட்டணம் செலுத்தினேம். - நவீன நாகரிகத்தின் உச்சியிலே கிற்கும் பாரிஸ் மாநகரம்,

மதுவும் மங்கையும் கலேயும் கவினும் ஆகியவை மகிழ்ச்சியை

யும்வெறியையும் ஊட்டும் பூலோக இந்திரபுரி. வெளிநாட்டு: மக்கள் பாரிஸ் தரும் இன்பத்தை நுகர வெள்ளம் வெள்ளமாக வருகிருர்கள். பணம் கொழுத்த அமெரிக் கர்கள் ஏராளமாக வந்து உலக இன்பத்தின் சிகரத்தையே பிடித்துவிடுகிருர்கள். மங்கையர் காணத்தை விடுத்துப் பருவ எழிலேக் காட்டும் கடன அரங்குகள் அவர்களே. 'வாருங்கள், வாருங்கள்’ என்று அழைக்கின்றன. வகை. வகையான உணவும் மதுவும் அவர்களுக்குக் கிடைக் கின்றன. வாழ்க்கையை அநுபவிக்கத் தெரிந்தவர்கள், பிறரையும் அநுபவிக்க வைக்கிறவர்கள் பிரெஞ்சுக் காராகவr.

எங்கே பார்த்தாலும் ஒவியம், சிற்பம். மெத்ரோக்க ளெல்லாங்கூடக் காட்சிச்சாலைகளைப் போல ஒளிர்கின்றன. பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் என்பது பாதாள ரெயில் நிலையங்களில் ஒன்று. அங்கே ரெயிலடி மேடை (பிளாட் பாரம்) எப்படி இருக்கிறது தெரியுமா? கண்ணுடி ஓவியங்கள் நிறைந்த அழகரங்கமாக அதை வைத்திருக் கிரு.ர்கள். மிகவும் புகழ்பெற்ற வண்ண ஒவியங்களின் படிகளை அந்தக் கண்ணுடிச் சித்திரசாலேயிலே காணலாம்.