பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லண்டனே அடைந்தேன்

லண்டன் ஒரு காலத்தில் கதிரவன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகரம்! இந்தியாவைப் பிரிட்டிஷார் ஆண்டபோது இந்திய நாட்டின் கடி வாளத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த அதிகாரிகள் இருந்த ஆட்சிபீடம்! ஜனகாயக ஆட்சியின் திருக்கோயிலாகிய பார்லிமெண்ட் உலகத்து ஜனநாயகச் சட்டசபைகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக ஓங்கி கிற்கும் மாநகரம் ஆங்கில இலக்கியங்களிலும் காவல்களிலும் வரலாற்றிலும் அடிக்கடி காட்சி தரும் வளம்பதி!-இந்த லண்டனே காங்கள் அடைந்தோம். :

அன்பர் திரு சா. கணேசன், திரு ரா. நாகசாமி ஆகியவர்களும் கானும் பாரிஸில் ஏர் இந்தியா விமானத்தில் பிற்பகல் 4-40க்குப் புறப்பட்டோம். விமானம் லண்டனுக்கு 5-35க்கு வந்து சேர்ந்தது. லண்டனில் இரண்டு விமான கிலேயங்கள் இருக்கின்றன. பெரிய விமான கிலேயம் ஹீத்ரோ (Heathrow) என்ற இடத்தில் உள்ளது. நெடுந்துார விமானங்களெல்லாம் அங்கே வந்து இறங்கு கின்றன. மற்ருெரு விமான கிலேயம் காட்விக் (Gatwick) என்ற இடத்தில் இருக்கிறது. நாங்கள் ஹீத்ரோ விமான கிலேயத்தில் இறங்கினேம். தட்டாரப் பூச்சிகள் மாதிரி அங்கே விமானங்கள் புறப்பட்டுக் கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன. விமானங்களில்தான் எத்தனை வகை விமானங்கள் புதிய புதிய அமைப்புக்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சின்ன ஊரையே

கண்டறி-12