பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன அடைந்தேன் 179;

பிரயாணிகளிடம் சொன்னுேம். அவர்கள் எங்கள் கையி லுள்ள சில்லறையை எண்ணிப் பார்த்துவிட்டு, டிக்கட் கொடுத்தவர் அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்று சொன்னர்கள். -

நேர்மைக்குப் பெயர்போன லண்டனில் இப்படியும் ஒரு முதல் அநுபவம் எங்களுக்கு ஏற்பட்டது. கோச்சுவண்டி வந்து கின்ற இடத்தில் பி. ஒ. ஏ. சி. கிலேயம் இருந்தது. அங்கே போய் இந்தச் செய்தியைச் சொன்னுேம். சொல்வி விட்டுக் காத்திருந்தோம். அவர்கள் டெலிபோன் மூலமாக விமான கிலேயத்துக்குச் செய்தி அனுப்பியிருப்பார்கள் போலும் ! அந்தப் பெரிய சந்தடியில் உடனே கவனித்து ஆவன செய்ய முடியவில்லை. காங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தோம். பிறகு ஆளுக்கு ஒரு டிக்கட் திரும்பும் பயணத்துக்கு ஆகும்படி கொடுத்தார்கள்! பணம் கொடுக்கவில்லை. நல்ல வியாபார முறை அல்லவா? ஆனல் எனக்கு அந்த டிக்கட் உபயோகப்படவில்லை. திரும்பும் போது நண்பர் ஒருவர் விமானநிலையத்துக்கே என்னைக் காரில் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டார்.

நாங்கள் லண்டனுக்கு வரும் நேரத்தைச் சில நண்பர் களுக்கு எழுதியிருந்தோம். ஒவ்வொருவரும் மற்றவர் எங்களே அழைத்துவரக்கூடும் என்று கினைத்திருந்தார் போலும்! யாரும் எங்களை அழைத்துச் செல்ல வரவில்லை. அதனல் என்ன ? நாங்கள் ஒரு டாக்ளியில் ஏறிக்கொண்டு இந்தியன் ஒய். எம்.சி.ஏ.யை அடைந்தோம். அது லண்டன் மாநகரத்தில் மேற்குப் பகுதியில் ஃபிட்ஸ்ராய் சதுக்கத்தில் (Fitzroy Square) இருக்கிறது. அங்கே எங்கள் மூவருக்கும் மூன்று அறைகளே அமர்த்தியிருந்தார்கள் நண்பர்கள்.

மதுரையைச் சார்ந்த டாக்டர் நாகசுப்பிரமணியம் என்னும் இளைஞர் ஓர் அறையில் இருந்தார். அவர் என்னுடைய நண்பர். நான் லண்டன் வருவதை அவருக்குத் தெரிவித்திருந்தேனதலால் என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண் மருத்துவர். ஓர் ஆஸ்பத்திf