பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பிரிட்டிஷ் மியூனலியம்

உலகத்திலே மிகப் பெரிய மியூஸியம், பிரிட்டிஷ் மியூஸியம். பல ஆண்டுகளாக அந்தக் காட்சிச்சாலையில் பொருள்கள் கூடிக்கொண்டே வருகின்றன. வரலாற்றுக்கு முந்திய காலத்துப் பழம் பொருள்களை அங்கே காணலாம். வெவ்வேறு நாடுகளின் நாகரிகத்தை விளக்கும் பழைய பொருள்கள் அங்கே இருக்கின்றன. சிலைவடிவங்கள், செப்புப் படிவங்கள், வேறு வகையான உருவங்கள். அந்த அந்த காட்டு வழிபாட்டு முறைகளைக் காட்டும் பிம்பங்கள். சமாதிகளிலிருந்தும் புதைகுழிகளிலிருந்தும் எடுத்த பண் உங்கள்-இப்படி நூறுநூறு வகையான பழம்பொருள்களே விளக்கத்துடன் அழகாகவும் பாதுகாப்பாகவும் சேமித்து வைத்து உலகத்தினர் கண்கள் கண்டு வியப்பால் விரியும் படி காட்டுகிருர்கள் அங்கே.

அங்குள்ள நூலகப் பகுதி மிக விரிந்தது. பல லட்சக் கணக்கான நூல்கள் அங்கே ஒழுங்காக வகைப்படுத்தி அடுக்கப் பெற்றிருக்கின்றன. பிரிட்டனில் அச்சிடப்படுகிற புத்தகங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரதியை இங்கே அனுப்ப வேண்டும் என்பது சட்ட்ம், அதனல் இது 'காபிரைட் லேப்ரரி என்ற பெயர் பெறுகிறது. இந்தச் சட்டத்தின் விளைவாக இங்கே புத்தகங்கள் மாதந்தோறும் குவிந்துகொண்டே இருக்கின்றன. நாற்பது லட்சம் புத்தகங்களுக்குமேல் இங்கே இருப்பதாகச் சொல்கிரு.ர்கள்.

கையெழுத்துப் பிரதிகளும் ஏட்டுச் சுவடிகளுங்கூட இங்கே இருக்கின்றன. பழங்கால முதல் பல நாடுகளில்