பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கண்டறியாதன கண்டேன்

வழங்கிய தபால் முத்திரைகளையும் தொகுத்து வைத்திருக் கிருர்கள்.

பத்திரிகைத் தொகுதிகள் உள்ள இடம், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தனி இடம், புத்தகங்கள் படங்கள் விற்கும் இடம் என்று பல பல பகுதிகள் இருக்கின்றன. உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மக்களின் பழங்கால நாகரிகத்தைப்பற்றி இங்கே வந்து தங்கி ஆராய்ச்சி செய்தால் ஆயுள் முழுவதும் செய்துகொண்டே இருக்கலாம். அதற்கு வேண்டிய வசதிகளே இங்கே செய்து கொடுக்கிருர்கள். -

அன்பர் திரு நாகசாமியுடனும் திரு சா. கணேசனுட லும் இந்த அற்புதமான கலைக்கோயிலை, வரலாற்றுச் சாலையை, அறிவுக் கருவூலத்தை, நாகரிகக் களஞ்சியத்தை, வியப்பூட்டும் அதிசயப் பிரபஞ்சத்தைக் காணச்சென்றேன். லண்டனுக்கு வந்த இரண்டாவது நாள் (22-7-1970) காலையில் புறப்பட்டேன். -

பிரிட்டிஷ் மியூஸியம் புளும்ஸ்பரி என்ற இடத்தில் இருக்கிறது. பழம் பொருள்கள், மனித இன வரலாற் றைக் காட்டும் பண்டங்கள், பழைய நூல்கள், சித்திரங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், தேசிய நூலகம் ஆகியவை அடங்கிய சாலை இது. பிராணிகளையும் தாவரங்களேயும் காட்சிப் பொருளாகக் கொண்ட "செத்த காலேஜ் தனியே தென் கென்ஸிங்டன் என்ற இடத்தில் இருக்கிறது.

இலக்கியம், கல்வெட்டு, வரலாறு, சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த மியூளியம் கற்பக விருட்சத்தைப் போலவும் காமதேனு வைப் போலவும் விளங்குகிறது. -

கிரேட் ரஸ்ஸல் தெரு என்ற வீதி வழியே இந்தக் காட்சிச்சாலைக்குச் செல்ல வேண்டும், - வர் ஹான்ஸ் ஸ்லோவேன் (Sir Hans Slowane) என்பவர் பதினேழாவது பதினெட்டாவது நூற்ருண்டில் வாழ்ந்தவர்.