பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கண்டறியாதன கண்டேன்

1717 ஆம் ஆண்டில் மக்கள் சபையில், அந்த ஒவியங்களை யெல்லாம் வாங்கி ஓர் ஓவியச் சாலையை அமைக்கலாம் என்று அவர் சொன்னர். ஆனல் அந்தச்சித்திரங்கள் கிறையப்பணம் கொடுத்து வாங்கின ரஷ்யாக்காரரை அடைந்து விட்டன. 19 ஆம் நூற்ருண்டில் தேசிய ஓவியச்சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உண்டாயிற்று. சிலர் அந்தக் கருத்தை எதிர்த்தார்கள். "நீங்கள் விலைகொடுத்து வாங்குவது தெரிந்தால் பணத்துக்கு ஆசைப்பட்டுச் சித்திரங்களே எழுதுவார்கள். அவை இயல்பான திறமை யைக் காட்ட முடியாது. குயிலேக் கூவு என்று சொல்லி உத்தரவு போட்டுப் பாடச் சொல்லலாமா?' என்று கேட் டார்கள். சில ஒவியர்களுக்கே இந்தக் கருத்துப் பிடிக்க வில்லை. 'ஓவியங்களைக் காட்சியில் வைத்துக் காட்டுவதா? விலைமகளா அவை:" என்று பரிகாசம் செய்தார்கள்.

ஜான் ஜூலியஸ் ஆங்கர்ஸ்டீன் (John Julius Angersteen) என்பவர் பல ஒவியங்களே ஆசையுடன் தொகுத்து வைத்திருந்தார். அவர் 1823 ஆம் ஆண்டில் இறந்துபோனர். அவர் வறியவராக இருந்து சொந்த முயற்சியால் பணக்காரர் ஆனவர். அவர் தம் இல்லத்தில் ஓவியங்களை வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு அவற்றை விற்றுவிடப் போகிருர்கள் என்ற செய்தி எழுந்தது. அப்போது பிரதம மந்திரியாக இருந்த லார்டு லிவர்பூலிடம் சிலர் அவற்றை வாங்கித் தேசத்தின் சொத்தாக ஆக்கவேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். பார்லிமெண்டின் சம்மதத்துடன் அந்தச் சித்திரங்களே வாங்க முடிவாயிற்று. 1824 ஆம் ஆண்டில் 38 ஒவியங்களே 57,000 பவுன் கொடுத்து வாங்கி ஒ வியச் சாலையை கி று வி னர் கள். அந்தக் காலத்திலேயே ஒவியங்களுக்கு அவ்வளவு விலே கொடுத்தார்கள் என்ருல் அவர்களுக்குக் கலையில் இருந்த ஆர்வத்தின் பெருமையை கன்கு உணர்ந்து கொள்ளலாம், ஆங்கர்ஸ்டீன் இருந்த இல்லத்திலேயே இந்த ஓவியச்சாலை அமைந்திருந்தது.