பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய மாளிகை 197

முன்பு சொன்னதுபோல இங்கே இத்தாலிய ஓவியங் களின் வகைகள் பல இருக்கின்றன. ஒவியர்களில் வெவ் வேறு பாணியில் படைப்பவர்கள் உண்டு. ஒவ்வொரு நாட் டிலும் இவ்வாறு அமைந்த பாணிகள் இருக்கின்றன. கியோட்டோ (Giotto) என்பவர் இத்தாலியின் பழைய ஒவியர்களில் ஒருவர். அவருக்கென்று தனிப் பாணி உண்டு. அவருடைய ஓவியங்களின் வரிசை தனியே ஒரிடத்தில் இருக் கிறது. அவருக்குப் பின் வந்தவர் வெனிஸில் இருந்த டைபோலோ (Teipolo) என்ற ஒவியர். அவருடைய சித்திரங்களும் உள்ளன. இடைப்பட்ட காலத்து ஒவிய மணிகளின் உயிரோவியங்களும் இங்கே இடம் பெற் _றுள்ளன.

விக்டோரியா ராணி 1863 இல் தம்மிடம் இருந்த ஜர்மானிய ஓவியங்களே இந்தச் சித்திரசாலேக்கு வழங்கி யிருக்கிருர். ஸ்பானிய ஓவியங்கள் ஒரு புறம் ; பிரெஞ்சுச் சித்திரங்கள் ஒருபுறம். ஒவ்வொரு நூற்ருண்டிலும் எழுந்த ஓவியச் செல்வங்களைத் தனித்தனியே வகுத்து வைத்திருக் கிருர்கள். ருபென்ஸ் என்ற ஒவியர் 1577 முதல் 1640 வரை வாழ்ந்தவர். அவருடைய ஓவியங்களில் எழிலுடைப் பெண்ணணங்கின் உருவம் ஒன்று. கிறிஸ்துபெருமானுடைய வரலாற்ருேடு தொடர்புடையவை பல.

இந்த ஒவியங்களில் ஏதாவது ஒன்று இரண்டைத் தான் சிலமணி நேரங்கள் இருந்து ஆழ்ந்து பார்த்துக் களிக் கலாம், கலைஞராக இருந்தால். எல்லாவற்றையும் பார்க்கப் புகுந்தால், எதைப் பார்க்க முடியும்? சிலவற்றைப் பார்க்கும் போதே தெவிட்டிவிடும். - -

ஒவியங்களே மதிக்கவும் போற்றவும் பணம் இருந்தால் மட்டும் போதாது ; ரசிகத்தன்மையும் இருக்கவேண்டும். ஆங்கிலேயர்களுக்குப் பணமும் இருக்கிறது; மனமும் இருக் கிறது. அதனல் அங்கே பழைய ஓவியர்களும் வாழ் கிருர்கள். தங்கள் படைப்புகளில். புதிய ஓவியர்களும் மலர்கிருர்கள்.