பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் ஓவியங்கள் 199

இன்று மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துக் கொண் டிருக்கி ஒர். அவரை யுகபுருஷர்களில் ஒருவர் என்றே சொல்ல வேண்டும், அவர் பிடிவாதக்காரராக இருந்திருக் கலாம்; துணிவு என்னும் பெரிய மலையின் சிறு நிழல் அது. அவருடைய மேதாவிலாசத்தை அவரே எழுதிய சொந்த வரலாறு காட்டும். அவரைப் பற்றி எழுந்துள்ள

நூல்களோ பலப்பல.

அந்த மேதையை லண்டனில் பார்த்தேன். பல மன்னர்களும் அரசியல் தலைவர்களும் மாவீரர்களும் கின்று கொண்டிருக்க, அவர் கம்பீரமாக ஒரு பெரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் பக்கத்திலேயே சென்று பார்த்தேன். இந்தியாவுக்குச் சுதந்தரம் தர மறுத்தவர் என்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. பெரிய மலேயை அணுகுவது போன்ற மதிப்பு உண்டாயிற்று.

பாரத நாடு விடுதலை பெறத் துணையாக இருந்தவர் அட்லி. அவர் பிரதமராக இருந்தபோதுதான் நமக்கு உரிமை வாழ்வு, சுதந்தரம் கிடைத்தது. அவரையும் பார்த்தேன். அவருடைய கண் இடுங்கி பிருந்தாலும் பார்வை விசால மானது. அதனுல்தான், ‘இனி இந்தியாவை நம்முடைய கட்டுக்குள் அடக்கி வைக்க முடியாது’ என்பதை உணர்ந்து சுதந்தரம் வழங்க முந்தினர். அந்த உபகாரியையும் கண் குளிரக் கண்டேன். சேம்பர்லேனப் பார்த்தேன்; ஈடனைப் பார்த்தேன். இன்னும் வரலாற்றைப் படைத்த பல பெருமக்களைப் பார்த்தேன்.

எங்கே என்ரு கேட்கிறீர்கள்: ' இவர்களெல்லாம் உலக வாழ்வை நீத்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டதே! இவர்களே எப்படிப் பார்க்க முடியும்?' என்று நீங்கள் யோசிப்பது எனக்குத் தெரிகிறது. ஒருகால் படங்களைப் பார்த்ததையே இப்படிச் சொல்வதாக எண்ண வேண்டாம். அந்த அந்தப் பெருமக்களே அவர்களுடைய சாட்சாத் வடிவத்துடன் கண்டேன். அதே உயரம், அதே பருமன்,