பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கண்டறியாதன கண்டேன்

அதே நிறம், அதே உடை, முகத்தில் உள்ள சுருக்கம், மறு எல்லாம் அப்படி அப்படியே கண்டேன்.

லண்டனில் மேரில்போன் ரோடு (Marylebone Road) என்னும் இடத்தில் மதாம் துஸாகின் மெழுகுக் காட்சிச் &māo (Madame Tussaud's Wax Exhibition) @05áš/03. அதை 'மதாம் துஸாக்ஸ் என்று சுருக்கி வழங்குகிருர்கள். அங்கே மெழுகினல் அமைத்த பல பெருமக்களின் வடிவங்களே வைத்துக் காட்சிச்சாலையாக்கி யாவரும் பார்க்கும்படி செய்திருக்கிருர்கள்.இங்கிலாந்து அரசர்கள். பிரிட்டிஷ் அரசக் குடும்பம், புகழ்பெற்ற அமைச்சர்கள், புலவர் பெருமக்கள், பிற நாட்டுத் தலைவர்கள் என்று பல வகையிலும் உலகம் அறிந்தவர்களே மெழுகால் அமைத்து வைத்திருக்கிருர்கள்.அசைவது, பேசுவது ஆகிய செயல்கள் இல்லையே ஒழிய அசப்பிலே பார்த்தால் அவர்களே கிற்பது போன்ற மயக்கம் ஏற்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றினிடையே வரும் பெரிய மனிதர்களே இங்கே பார்க்கலாம். அந்த அந்தக் காலத்தில் அவர்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்களோ அதே கோலத்தில் கிற்பதைக் காணலாம். -

மதாம் துஸாத் என்னும் பெண்சிற்பி பிரெஞ்சு காட்டைச் சேர்ந்தவர். அவருடைய சிற்றப்பா டாக்டர் கர்ட்டியஸ் (Dr. Curtius) என்பவர் மெழுகி ேைல பொம் மைகளை அமைக்கும் கலையில் வல்லவர். அவர் 1757ஆம் ஆண்டில் பெர்னே (Berne) என்ற ஊரில் ஒரு சிறிய மெழுகுப் பொம்மைக் கூடத்தை அமைத்தார். 1762ஆம் ஆண்டு அந்தப் பொம்மைகளைப் பாரிஸ் மாநகருக்குக் கொண்டு வந்தார். அவர் காலமான பிறகு அவற்றை மதாம் தளலாத் பாதுகாத்து வந்தார். மதாம் துஸாக் மெழுகுப் படிவம் அமைப்பதில் மிகவும் துறைபோனவர். பிரெஞ்சுப் புரட்சியில் இறந்து போன பல வீரர்களின் திருமுகங்களைப்போல மெழுகில் அமைத்துத் தந்து பொருள் ஈட்டினர். பாரிஸில் 1770ஆம் ஆண்டில்