பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கண்டறியாதன கண்டேன்

தற்காக அரசியார் பொறுமையாகப் பல மணிநேரம் - அமர்ந்திருந்தாராம். வரலாற்றுப் புகழ் படைத்த பிரிட்டிஷ் அமைச்சர்கள் இங்கே இருக்கிருர்கள்.

அமெரிக்க நாட்டு வரலாற்றில் ஒளிரும் தாரகைகளே ஓரிடத்தில் நிறுத் தியிருக்கிருர்கள். ஜார்ஜ் வாஷிங்டன் இருக்கிருர்; கென்னடி இருக்கிருர், பெஞ்சமின் பிராங்க் ளினும் இருக்கிருர், ஐஸன்ஹோவரும் இருக்கிரு.ர். டிக்கன்ஸ் முதலிய புலவர்களையும் பார்த்தேன்.

பிற காட்டுத் தலைவர்களையும் பார்க்கலாம். நம் முடைய ஜவாஹர்லால் வேரு ஒரு புறம் கிற்கிருர், ரீமதி இந்திரா நேருவைக்கூட ஒரு நாற்காலியில் அமர்த்தி வைத்திருக்கிருர்கள். நேருவைப் பார்த்தேன்; அவருடைய வடிவம் சரியாக இல்லை.

"இவ்வளவு பேர்களைப் பார்க்கிருேமே; நம்முடைய மகாத்மா எங்கே?' என்று பார்த்தேன். காணவில்லை. "அவரை ஏன் வைக்கவில்லை? அவர்மேல் கோபமா? என்று யோசித்தேன். பெரிய கொலேகாரர்களேக்கூட, “L/uišiqjrš & u– ò” (ChaInber of Horrors) zr&7 AD @l_š$ ãy வைத்திருக்கிருர்கள். அப்படி இருக்க, அவதாரபுருஷராகிய மகாத்மாவை ஏன் மறந்துவிட்டார்கள்? எனக்குக் கோபம் கோபமாக வந்தது. தசரதன் கைகேயியினிடம் உள்ள கோபத்தால், "அவள் என் மனேவி அல்லள் பரதன் என் மகன் அல்லன்: அவன் எனக்கு இறுதிக் கடன் செய்யக் கூடாது' என்று சொல்லிவிட்டானம். அப்படி ஒருகால் வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியடிகள் வடிவத்தை இங்கே வைக்கக்கூடாது என்று சொல்லி விட்டாரோ? என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றி என் மனத்தில் அபுரணடன.

விசாரித்தேன். உண்மை தெரியவந்தது. மகாத்மா

காந்தியின் திருவுருவத்தை வைத்திருந்தார்களாம். ஆனல் அக்த வடிவம் காந்தியின் உருவத்தைப்போலத் தோன்ருமை