பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் ஒவியங்கள் 205.

நான் வருவது அவருக்குக் தெரியும், ஆகவே இந்தியன் ஒய். எம். ஸி. ஏ. யில் வந்து என்னைப் பார்த் தார். அவர் கார் வைத்திருக்கிருர். எந்த இடத்துக்கு வேண்டுமானலும் என்னையும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு செல்லத் தயாராக இருந்தார். அடிக்கடி வந்த பார்த்தார். இவ்வளவுக்கும் அவர் நான் இருந்த இடத்தி லிருந்து நெடுந்து ரத்திலுள்ள எஸ்ஸெக்ஸ் என்ற பகுதி யில் வசிப்பவர். லண்டனில் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகம். கண்ட இடங்களில் காரை நிறுத்த முடியாது. அதற்கென்று சில இடங்கள் இருக்கின்றன. அங்கேயும் கம் விருப்படி நெடுநேரம் கிறுத்த முடியாது. கேரத்தின் அளவுக்கேற்ற கட்டணம் உண்டு. அங்குள்ள கம்பங்களில் உள்ள துவாரத்தில் போட்டுவிட வேண்டும். அன்பர் சிவ சுப்பிரமணியன் இந்திய உணவு கிடைக்கும் ஓர் ஹோட்ட லுக்கு என்னை அழைத்துச் செல்ல எண்ணினர். அவர் காரில் ஏறினேன்; அன்பர் சா. கணேசனும் உடன் வந்தார். கார் போய்க்கொண்டே இருந்தது; எங்கும் கிறுத்த முடியவில்லை. குறிப்பிட்ட தெருவுக்குப் போகப் பல தெருக்களைக் கடக்க வேண்டும். அங்கங்கே உள்ள நெரிசலால் எப்படியோ சுற்ற வேண்டியிருந்தது. நான்கு மணி நேரம் சுற்றியும் அந்த ஹோட்டலுக்கு அருகில் போக முடியவில்லை. கடைசியில் "எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி' என்றபடி நாங்கள் புறப் பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தோம். அப்போதுதான் லண்டனில் கார் இருப்பதனால் பெரிய செளகரியம் ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது.

லண்டனில் எங்காவது குறித்த நேரத்தில் போய்ச் சேர வேண்டுமானல் கார் உதவாது. பஸ்ஸில் போனல் தாமத மாகப் போகவேண்டியிருக்கும். ஆனல் பாதாள ரெயிலில் போனல் எளிதாகப் போய்ச் சேரலாம். அங்கே அந்த ரெயிலைக் குழாய் ரெயில் (Tube Railway) என்கிருர்கள். அடுத்த தெருவுக்குப் போக வேண்டுமானல் கடந்து, போவதுதான் உத்தமம். காரில் போவதானல் அது ஒரு யாத்திரையாகவே முடிந்தாலும் முடியலாம்.