பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கண்டறியாதன கண்டேன்

துக்குப் போய்ப் பார்த்தாலும் பிரமிப்பை ஊட்டும்படி அது அமைந்திருப்பதைப் பார்த்தேன். எதை என்று பார்ப்பது? எல்லாம் அருமையானவை. கண்கள் பார்த்துப் பார்த்து வியப்பை அடைந்தன. கால்கள் நடந்து நடந்து: அலுத்துப்போயின. ஆனல் மனம் மட்டும் மேலும் மேலும் ஊக்கத்தைப் பெற்றது.

லண்டன் டவர் என்பது ஒரு பெரிய கோட்டை. அதைச் சுற்றிலும் அகழி உண்டு. இந்தக் கோட்டைக்குள் பல தனித் தனிக் கட்டிடங்கள் இருக்கின்றன. இந்த இடம் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்தது; ஒரு காலத்தில் விலங்குக் காட்சிச் சாலையாக இருந்தது; மரண தண்டனையை நிறைவேற்றும் கொலைக்களமாக இருந்தது: ஒரு காலத்தில் படைக்கலக் கொட்டிலாக இருந்தது. இன்று காட்சிப் பண்டங்கள் பலவற்றைக் கொண்ட பெரிய கோட்டையாக இருக்கிறது. இந்தப் பெரிய கோட்டைக் குள் பல மாளிகைகள் உள்ளன. மிக விலையுயர்ந்த அணி கலன்கள் வைத்துள்ள மாளிகை ஒருபுறம்; படைக்கலங் களே வைத்துக் காட்டும் பகுதி ஒரு புறம்: பழங்காலச் சிறைச்சாலைக்குரிய அடையாளங்கள் உள்ள இடம் ஒரு ւլ.Ո)ւն •

தேம்ஸ் நதியை அடுத்து இந்தக் கோட்டை இருக்கிறது. ஐரோப்பாவிலுள்ள கோட்டைகளுக்குள் பழையது இது. இதை 900 ஆண்டுகளுக்கு முன் வெற்றிவீரன் வில்லியம் (William the Conqueror) argir p ungårørsår æılış gɔzör. இதைக் கட்ட இருபது ஆண்டுகள் ஆயினவாம். ஒவ் வொரு மன்னர் காலத்திலும் இந்தக் கோட்டையில் பல. கட்டடங்கள் எழும்பின. முதல் ரிச்சர்டு மன்னன் இதைச் சுற்றி அகழியை வெட்டுவித்தான். நடுவில் ஒரு பெரிய கோபுரமும் நடுகடுவே வேறு பதினெரு சிறிய கோபுரங் களும் இங்கே உள்ளன. -