பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டையும் கொலைக்களமும் 2H}

வாடர்லூ பாரக்ஸ் என்ற இடத்தின்கீழ் நிலவறை யாக உள்ள அணிகல மாளிகை (Jewel House) என்ற இடத்தில் அரச குடும்பத்தின் விலைமிக்க ஆபரணங்களே வைத்திருக்கிருர்கள். இங்கே கட்டுக்காவல் அதிகம். இந்த இடத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிருர் கள். நாங்கள் வரிசை வரிசையாகக் கியூவில் கின்ற கூட்டத் தோடு மெல்ல மெல்ல நகர்ந்து சென்றே அணிகலன்களைப் பார்க்க முடிந்தது.

இங்கே முடிகள், செங்கோல்கள், உடை வாள்கள். அரசருக்குரிய அணிகள், வெள்ளித் தட்டுகள் முதலிய அரிய பொருள்கள் இருக்கின்றன. அரசர் அணியும் முடியில் மிகப் பழையனவும் வரலாற்றுச் சிறப்புடையனவுமாகிய மணிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. லேமும், மரகதமும், மாணிக்கமும், வைரமும் ஒளிவிடுகின்றன. அந்த மணி முடியில் முத்துக்களும் வைரங்களும் மூவாயிரத்துக்குமேல் இருக்கின்றனவாம். எலிஸபெத் அரசி அணிந்த முத்துக் காதணிகள் ஓரிடத்தில் ஒளிர்கின்றன.

இப்போதுள்ள பிரிட்டிஷ் ராணி எலிஸபெத்தின் அன்னையாருக்கும் எலிஸபெத் என்றே பெயர். அவர் அரசி யாக 1937இல் பட்டம் ஏற்றபோது அவருக்காகச் செய்த மணிமுடி இங்கே இருக்கிறது. இதில் பல வைரங்கள் நட்சத்திரங்களைப் போல மின்னுகின்றன. அவற்றினி டையே இந்தியாவிலிருந்து சென்ற கோஹினூர் பளபளக் கிறது, கோஹினூர் என்பதற்கு ஒளிமலை என்பது பொருளாம். இந்த வைரத்தைப்பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இதை ஆடவர் அணிந்தால் ஆபத்து வருமாம்; பெண்கள் அணிந்தால் உலகத்தையே ஆளு வார்களாம். -

பார்க்கப் பார்க்கக் கண்ணேப் பறிக்கும் அணிகலன்களைக் கண்டேன். பல நாடுகளிலிருந்து வந்த நவமணிகளாலான ஆபரணங்கள் அவை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒளி மிகுந்த காலத்தில் ஈட்டிய செல்வம் அவை. அவற்றைப்