பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கல்வித் திருநகர்

கம்பன் தன் இராமாயணத்தில் கோசல காட்டை வருணிக்கிருன். அங்கங்கே இளைஞர்கள் பயிலும் கலைக் கழகங்கள் இருக்கின்றன. மகளிர் பந்தாடும் இடங்கள் உள்ளன. எங்கும் சோலைகளும் பூங்காக்களும் கிரம்பிய இடத்தில் காளேயர்கள் கல்வி பயில்கிருர்கள்.

"பந்தினை இளையவர் பயிலிடம், மயிலுரர் கந்தனே அனேயவர் கலேபயில் கழகம், சாதன வனமஅல சணடக வனமாம, நந்தன வனம்அல கறைவிரி புறவம்'

என்பது பாட்டு. இளைய மங்கையர் சந்தன வனத்தில் பந்தாடுகிருர்கள்; அவர்களுடைய மேனிமணத்தால் அது சண்பகக் காடுபோல மணக்கிறதாம். முருகப் பெருமானப் போன்ற இகளஞர்கள் நந்தனவனங்களில் கல்வி பயில் கிருர்கள்; அவர்கள் மேனி மணத்தால் அவை முல்லை வனமாக மணக்கின்றள. வேறு ஒரு வகையிலும் இதற்குப் பொருள் கொள்வதுண்டு. பெண்கள் பந்தாடுமிடம் சந்தனவனமாக இருக்கும்; அன்றெனில் சண்பகவனமாக இருக்கும். காளையர் கலைபயில் கழகம் நந்தனவனமாக இருக்கும்; அல்லது முல்லைப் பூங்காவாக இருக்கும். -

எப்படிப் பொருள்கொண்டாலும் இளைஞர்கள் கல்வி பயின்ற இடங்கள் இயற்கையெழில் கிரம்பிய பூங்காக்கள் என்று தெரிய வருகிறது. இந்தப் பாடல் ஆக்ஸ்போர்டுக்குப் போயிருந்தபோது எனக்கு கினேவுக்கு வந்தது.