பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 கண்டறியாதன கண்டேன்

பாரோ? அந்த இரண்டாவது நண்பர் என்ன வேறு எங்காவது தேடிக் கொண்டிருப்பாரோ?' என்று என்னுடைய சந்தேகத்தைச் சொன்னேன்.

'இங்கே யாரிடமாவது கொடுத்திருப்பாரோ? விசாரிக்க லாமே!' என்று சொல்லிச் சாமான்களே கிறுக்கும் இடத்தில் இருந்த விமான கிலேயப் பணியாளராகிய பெண்மணியையே அணுகி, "இரவு ஏதாவது ஹெல்த் சர்ட்டிபிகேட் வங்ததா?" என்று கேட்டேன். -

'இதோ ஒன்று வந்திருக்கிறது. இது உங்களுடையதா பாருங்கள்' என்று சர்வசாதாரணமாக ஒரு கவரை என்னிடம் தந்தாள். அதைப் பிரித்துப் பார்த்தேன். 'ஆ' இதோ வந்துவிட்டது' என்று கூவினேன்.

அந்தப் பெண்மணிக்கு நன்றி சொன்னேன். மனத் துக்குள் அவளைக் கடிந்துகொண்டேன். இப்படி ஒன்று வந்திருக்கிறது என்பதை ஒலி பெருக்கிமூலம் சொல்லி யிருந்தால் இவ்வளவு கவலைப்பட்டிருக்க வேண்டாமே! அப்படி இவள் செய்யவில்லையே!' என்ற எண்ணமே அதற்குக் காரணம். அவளுக்குத் தெரியுமா கம்முடைய சங்கடம்? அவளுக்கு எவ்வளவோ வேலைகள்! அந்த மட்டிலும், "ஒன்று வந்திருக்கிறது' என்று சொல்லிக் கொடுத்தாளே! அதுவே பெரிய உபகாரம் அல்லவா? இதே கிகழ்ச்சி மேலே நாடுகளில் நடந்திருந்தால் அவர்கள் நிச்சயமாக ஒலிபெருக்கிமூலம் செய்தியைச் சொல்லி ாம்மிடம் அதைச் சேர்த்திருப்பார்கள். அதை என் அநுபவத்தில் கண்டேன். அதைத்தான் பின்னல் சொல்லப் போகிறேனே! - -

கையில் சர்ட்டிபிகேட் கிடைத்தவுடன் போன கோக்கி ஓடினேன். திரு பகவன்தாஸ் கோயங்காவுக்கு கேரே என்றி தெரிவிக்க எண்ணினேன். முடியவில்லை; போன எடுத்த நண்பரிடம், அவருக்கு என் நன்றியைத் தெரி