பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கண்டறியாதன கண்டேன்

பிரார்த்தனைக்கூடம் இல்லாத கல்லூரியே கிடையாது. மிகச் சிறந்த கல்வி நிலையங்களாகிய இவற்றில் பிரார்த் தனக் கூடங்களைப் பார்த்தபோது எனக்கு நம் காட்டுக் கல்லூரிகள் நினைவுக்கு வந்தன. தனியார் கல்லூரிகளில் பிரார்த்தனேக்கூடங்கள் சில இடங்களில் இருக்கின்றன. மற்ற இடங்களில் இல்லை. நம் காடுதான். சமயச் சார்பற்ற காடாயிற்றே! இங்கே மாணவர்களுக்குப் பிரார்த்தனை எதற்கு? பக்தி எதற்கு? கடவுளுணர்வு எதற்கு? இந்த அவலத்தை கினேந்து உள்ளுற மறுகினேன். பிரார்த்தனைக் கூடங்களில் பக்தியை ஊட்டும் பல ஒவியங்கள் இருக் கின்றன. கெபிள் காலேஜ் என்ற கல்லூரியில் உள்ள பிரார்த்தனை மண்டபம் மிக அழகானது. பல வண்ணக் கற்களால் அதைக் கட்டியிருக்கிருர்கள். 1868ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1882இல் முடித்தார்கள். வில்லியம் ஹால்மன் ஹண்ட் என்ற புகழ்பெற்ற ஒவியர் எழுதிய ‘a as 52ss' (Ihe Light of the World) Gror so assor or ஒவியம் அங்கே இருக்கிறது. கிறிஸ்து பெருமானுடைய ஒவியம் அது.

இங்குள்ள கல்லூரிகளில் மிகப் பெரியது கிறைஸ்ட் காலேஜ். அங்கே ஓர் அழகான ர்ேகிலே இருக்கிறது: பொன்னிற மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. மக்தலேன் கல்லூரியில் மான் விளையாடும் பூங்கா இருக்கிறது. மீன் துள்ளும் வாவியும் மான் துள்ளும் பூங்காவும் உள்ள கல்லூரிகள் என்ருல் அந்தச் சூழ்கிலே எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தாலே இனிக்கும்.

அங்குள்ள கூடச் சுவர்களே அங்கே படித்த மானக் கர்களில் புகழ்பெற்றவர்களின் படங்களும், ஆசிரியர்களில் சிறப்புப் பெற்றவர்களின் படங்களும் அழகு செய்கின்றன. ஆசிரியர்கள் தங்கும் அறைகளில் அவர்கள் அமரும் மேசை கடுவே இருக்கும்; எதிரே இருமருங்கும் மாணவர்கள் அமரும் இருக்கைகள் உள்ளன. மாண்வர்கள் ஆசிரியர்கள் உள்ள இடத்துக்கு வந்து பாடம் கேட்டுச் செல்வார்கள்.