பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித் திருநகர் 217.

சில மாணவர்களே வந்து பாடம் கேட்பார்கள். மந்தை மங்தையாக மாணவர்கள் அமர்ந்து மனம் போனபடி பொழுது போக்கும் பெரிய வகுப்புக்கூடங்களும், ஆசிரியர்கள் அவர்களே நாடி வந்து விரிவுரையாற்றிச் செல்லும் போதனையும் அங்கே இல்லை. குறிப்பிட்ட சில மாணவர்களே ஆசிரியரிடம் பயில்வதனல் அவர்களை நன்கு அறிந்து கொள்ளவும் தனித் தனியாக ஒவ்வொருவருடைய அறிவின் திறத்தையும், எப்படிப் பயிற்சி தரவேண்டும் என்ற முறையையும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு எற்படுகிறது,

ஒவ்வொரு கல்லூரியிலும் பெரிய நூல் கிலேயம் இருக் கிறது. அச்சிட்ட நூல்களோடு கையெழுத்துப் பிரதிகளும் அங்கே உள்ளன. வேறு எங்கும் காணக் கிடைக்காத நூல்களே அங்கே காணலாம்.

கல்லூரிகளில் தனித்தனியே உள்ள அமைப்புக்களை யன்றிப் பல்கவைக் கழகத்துக்குரிய பொதுவான இடங்கள் வேறு இருக்கின்றன. யூனிவர்ஸிடிப் பூங்கா என்ற பெரிய பூம்பொழில் ஒன்று இருககிறது. விளையாட்டு மைதானம் தனியே இரு க் கி றது. ஆற்றில் படகுகளை விட்டு விக்ளயாடி இன்புறுவார்கள் மாணவர்கள். பல்வேறு பல்கலைக் கழகங்களிலுள்ள மாணவர்களிடையே படகு விடும் பந்தயம் இங்கே நடைபெறும்.

பிரிட்டனிலுள்ள தாவர இயல் தோட்டங்களுக்குள் (Botanical gardens) மிகப்பெரிய தோட்டம் ஆக்ஸ்போர்டில் இருக்கிறது. மக்தலேன் காலேஜுக்கு எதிரில் இருக் கிறது. ஒரு பெரிய மியூளியமும் இந்நகரில் இருக்கிறது. ஆஷ்மோலியன் மியூவியம் என்று பெயர். ஆஷ்மோல் என்பவர் 1675இல் அதை நிறுவினராம். அதனல் அந்தப் பெயர் வந்ததாம்.

பேலியல் கல்லூரிக்குள்ளும் ட்ரினிடி காலேஜுக் குள்ளும் சென்று பார்த்தோம். காங்கள் போன காலம்