பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர்வ ககரம் 17

விக்கும்படி சொன்னேன். அதை அந்த நண்பர் நிச்சயம் தெரிவித்திருப்பார். இல்லாவிட்டால்தான் என்ன? இதோ இப்போது எல்லாரும் அறிய என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கையில் ஹெல்த் சர்ட்டிபிகேட் கிடைத்தவுடனே பாரிஸுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது போன்ற இன்பம் உண்டாயிற்று. மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யத் தொடங்கினேன். என்னுடைய சாமான்களே நிறுத்து டிக்கட்டைக் காட்டிப் பதிவு செய்துகொண்டேன். கைச் செலவுக்கு ஆறு டாலர் ஒவ்வொரு பிரயாணிக்கும் "எக்ஸ்சேஞ்சு தருவார்கள்; அதாவது, அதன் மதிப்புக் குரிய பணத்தைச் செலுத்தினுல் ஆறு அமெரிக்கன் டாலரோ, அதற்குச் சமமான பிற நாட்டுப் பணமோ தருவார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும்போது நம் கையில் உள்ள பணம் முழுவதற்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். எவ்வளவு எக்ஸ்சேஞ்சு ரிஸர்வ் பாங்க் தருகிறதோ அதைத்தான் எடுத்துக்கொண்டு போகலாம். என்னிடம் முன்பே தமிழக அரசு தந்த 54 பவுன் இருந்தது. இப்போது ரூபாயைக் கொடுத்து ஆறு டாலர்களே வாங்கிக் கொண்டேன்.

அந்த அந்த நாட்டுக்குத் தனித்தனியே நாணயங்கள் இருக்கின்றன. பிரிட்டனில் வழங்கும் நாணயம் பவுன்: நாணயமாற்றுப் பாஷையில் காகிதப் பவுனே ஸ்டர்லிங் என்று சொல்வார்கள் ஒரு பவுன் 18 ரூபாய். அமெரிக்க நாணயம் டாலர்; அதன் மதிப்பு ரூ. 7-50. அமெரிக்கன் டாலர் சர்வாந்தர்யாமியைப் போன்றது. அதை எந்த நாட்டுப் பாங்கியிலும் மாற்றிக்கொள்ளலாம். பெரும் பாலான கடைகளில் அதை வாங்கிக்கொள்கிருர்கள். சில இடங்களில் டாக்ளிக்காரர்கூட வாங்கிக்கொள்கிரு.ர். அதற்கு அவ்வளவு மதிப்பு அடுத்தபடியாக மதிக்கப் பெறுவது பிரிட்டிஷ் நாணயமாகிய பவுன். பலபேர் பவுன்

கண்டறி-2