பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனில் தமிழ் ஓசை 22?

வைணவம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற சமயங்க்ளேச் சார்ந்த நூல்கள் தமிழில் உள்ளன என்றும், தமிழனுடைய பரந்த மனோபாவம் பாராட்டுவதற்குரியது என்றும் பேசினர். -

என்னைக் கடைசியில் பேசச் சொன்னர்கள், இலங்கை யில் என் பேச்சைக் கேட்ட அன்டர் சிலர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் தங்கள் பேச்சைக் குறைத்துக்கொண்டு என்னைச் சற்று நீளமாகப் பேச வழி வகுத்தார்கள். கூட்டத்தினரும் அதை விரும்பினர்கள்.

நான் முதலில் பாரிஸில் கண்ட காட்சியையும் லண்டனில் கண்ட காட்சியையும் ஒப்பிட்டுப் பேசினேன்.

'மூன்ருவது உலகத் தமிழ் மாநாட்டுக்காகப் பாரிஸ் மாாகரத்தில் வந்து இறங்கிைேம். எங்களுக்குத் தமிழ் தெரியும், ஆங்கிலமும் தெரியும். இறங்கிக் கடைக்குச் சென்ருேம். அங்கே உள்ள பண்டங்களைக் கண்டோம், மக்கள் ஆணும் பெண்ணுமாக இணைந்து வந்தார்கள். காவியத்திற் கண்டவற்றைக் கண்கூடாகவே பார்த்தோம். பண்டங்களின் விலையைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்று ஆங்கிலத்தில் கேட்டோம். அவர்கள் ஏதோ சொன்னர்கள். எங்களுக்கு விளங்கவில்லை. ஊமை வாய் திறந்து ஒலி எழுப்புகிருன்; நமக்கு விளங்குகிறதா? அவர்கள் பேச்சு எங்களுக்கு ஊமையின் பேச்சாகவே இருந்தது. எங்கள் பேச்சும் அவர்களுக்கு அப்படித்தான் இருந்திருக்கும். எங்கே போனலும் அவர்கள் பிரெஞ்சு மொழியில்தான் பேசினர்களே யொழிய ஆங்கிலத்தில் பேசவில்லை. காதிருந்தும் செவிடர்களாகவும் வாயிருந்தும் ஊமைகளாகவும் உலவினுேம் பிறகு உலகத் தமிழ் மாகாட்டுக்குப்போனோம். அங்கே எல்லாம் ஆங்கிலத்திலே பேசினர்கள். ஒரு நாள் மாணவர் தமிழ் மன்றம் தொடங்கினர்கள். அதில் தமிழோசையைக் கேட்டோம்.