பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கண்டறியாதன கண்டேன்

என்ருல் தங்க நாணயம் என்று எண்ணிக்கொள்கிருர்கள். அதற்குச் சாவரின் என்று பெயர். காகித நாணயமாகிய பவுனே ஸ்டர்லிங். பாரிஸுக்குப் போனவுடன் செலவுக்கு ஆகட்டுமென்று ஆறு டாலர்களைப் பிரெஞ்சு நாணயமாகிய ஃபிராங்குகளாக மாற்றிக்கொண்டேன். ஒரு ஃபிராங்க் ஏறத்தாழ ரூ. 1-10 மதிப்புடையது.

சென்னேயிலிருந்து எங்களுடன் வந்த டாக்டர் மு. வ. வும், திரு ஜர்ைத்தனமும், திரு தியாகராஜ முதலியாரும் இரவு விமானத்தில் புறப்பட்டுவிட்டார்கள். மற்றவர்கள் காலை விமானத்தில் போவதாக இருந்தார்கள். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்து நண்பர்களாகிய திரு கந்தசாமி முதலிய வர்கள் எங்களே வழியனுப்ப வந்தார்கள்; "வரும்போது பம்பாயில் இரண்டொரு நாள் தங்கி எங்கள் தமிழ்ச் சங்கத்தில் உங்கள் பிரயாண அநுபவங்களேப்பற்றிச் சொல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்கள். -

நாங்கள் செல்ல இருந்த விமானம் காலேயில் 7 மணிக்கே புறப்பட வேண்டும். 8-30 மணிக்குத்தான் புறப்பட்டது. அதன் பெயர் நந்தா தேவி. விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பம்பாயில் வந்து இறங்கியதுமுதல் உடல் நலச் சான்றிதழ் கிடைக்குமட்டும் இருந்த கவலேயும் படபடப்பும் எக்கமும் ஆவலும் அடங்கிவிட்டன. போகப் போகிற பாரிஸைப் பற்றி எண்ணமிடலானேன். அங்கே தங்குவதற்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிருர்கள் என்று தெரியாது. எல்லாருக்கும் ஆவது நமக்கும் ஆகட்டும் என்று அமைதி பெற்றேன். x -

விமானத்தில் முதல் வகுப்பு, சிக்கன வகுப்பு என்று இரண்டு பிரிவு உண்டு. முதல் வகுப்பில் மாண்புமிகு மதியழகனும், புதுவை முதல்வர்மாண்புமிகு ஃபரூக்கும். சென்னைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு கருத் திருமனும் வந்தார்கள். நண்பர் கிரு சா. கணேசன், திரு கா. அப்பாத்துரை, அமைச்சரின் செயலாளர்