பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளேயா, பரிசா? 237

காரர்கள் ஒரு பொருளைத் திப்புவுக்குப் பரிசளித்தார்கள்.

கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இங்கிலீஷ்காரர் ஒருவரை ஒரு புலி மிதித்துக் கொல்லும் நிலையில் அமைந்த

மரச் சிற்பம் அது. திப்புவையே புலியாக எண்ணி

அமைத்தது அது. அது வெறும் சிற்ப வடிவம் மட்டும்

அல்ல; அது ஒரு வாத்தியம். அதை அமிழ்த்தினல் ஹார். மோனியத்தைப் போலச் சுரங்கள் ஒலிக்கும். வெளியிலே, பார்த்தால் கொடுமையான கொலைத் தோற்றம்; அமிழ்த்திப்

பார்த்தால் கலையின் வெளிப்பாடு. இந்த வடிவம் 47.ஏ

அறையில் இருக்கிறது. -

கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் இந்தியாவி லிருந்து வந்த பல கலைப் பண்டங்களைத் தனியே மியூஸிய மாக வைத்திருந்தார்கள். நாளடைவில் அதில் உள்ளவை பெருகவே. இந்தியா ஆபீஸில் நூலகத்தைப் பிரித்துக் கொண்டு போனர்கள். மற்றவற்றை இங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள், சிலவற்றைப் பிரிட்டிஷ் மியூளியத்துக்கு அனுப்பினர்கள்,

லண்டனில் எந்தக் காட்சிச்சாலைக்குப் போனலும், அங்கே நாம் காணுபவை சிலையுருவங்களானலும் சரி, உலோக விக்கிரகங்களானலும் சரி, நவமணிகளானலும் சரி, ஆடை அலங்காரங்களானலும் சரி, மரப்பண்டங்களா லுைம் சரி, வெள்ளிப் பாத்திரங்களானலும் சரி, அந்தப் பெரிய தொகுதியில் ஒரு கணிசமான அளவுக்கு இந்தியாவி லிருந்து சென்றவை இருப்பதைக் காணலாம். அவற்றைக் காணும்போது அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றபடி உணர்ச்சி உண்டாகும். சிலருக்கு வியப்பு ஏற்படும்: சிலருக்குப் ப்ெருமிதம் உண்டாகும். சிலருக்குக் கோபம் தோன்றும்; சிலருக்கு அழுகையே வரும்.

என்னுடன் வந்த அன்பர் காகசுப்பிரமணியன், "எல்லாம் நம்முடைய காட்டிலிருந்து கொள்ளையடித்து வந்தவை என்ருர். ஆனல் அங்கே உள்ள விளக்கம் சொல்வது என்ன தெரியுமா? 'கிழக்கிந்தியக் கம்பெனி