பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சட்டம் படைக்கும் திருக்கோயில்

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பார்லிமெண்டைப் பார்லிமெண்டுகளின் தாய் என்று சொல்வார்கள். ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றி வருவதில் அது வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது. பிரிட்டிஷாருடைய அதிகார விரிவு இப்போது குறைந்து கொண்டு வந்தாலும், அங்குள்ள பார்லிமெண்டு நடைமுறை இன்றும் பண்புடன் நடந்து வருகிறது.

ஐக்கிய அரசு (United Kingdom) என்று பெயர் பெறும் பிரிட்டிஷ் அரசில் ஸ்காத்லாந்து. வேல்ஸ், இங்கிலாந்து என்ற மூன்றும் அடங்கிய பிரிட்டனும், வடக்கு அயர் லாந்தும் இருக்கின்றன. வழிவழி வந்த மன்னர்களும் அரசிகளும் காட்டின் தலைவர்களாக இருந்து வருகிருர்கள்: ஆகையால் இதை முடியரசு என்று சொல்லலாம். ஆனல் பழங்காலத்து முடியரசைப் போலக் கோட்ைசி இன்று நிலவவில்லை; குடிமக்களாட்சியே நிலவுகிறது. நம் காட்டில் குடியரசுத் தலைவரைப் போல அரசியார் இருக்கிரு.ர். குடியரசுத் தலைவரை நாம் அவ்வப்போது தேர்ந்தெடுக் கிருேம். அங்கே அரசியோ, அரசரோ பரம்பரை பரம் பரையாக இருந்து வருகிருர்கள். இதுதான் வேறுபாடு.

பார்லிமெண்டு என்பது பொது மக்களின் சபை (House of Commons), Gravaitassificir rapu (House of Lords) என்ற இரண்டு சபைகள் அடங்கியது. நம்முடைய காட்டிலும் லோக சபை, ராஜ்ய சபை என்ற இரண்டு