பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கண்டறியாதன கண்டேன்

உறுப்பினர் பேச வேண்டும் என்று வரையறை செய்வார். விவாதத்தின் விதிமுறைகளே யாரேனும் மீறில்ை சபைத் தலைவர் அவரைக் கண்டிக்கும் அதிகாரம் பெற்றவர். எல்லே கடந்து போனல் உறுப்பினரைச் சில காலம் சபைக்கு வராமல் இருக்கும்படி ஆணை பிறப்பிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. . .

மேல்சபையில் இத்தனை கெடுபிடி இல்லை. மேல் சபைத் தலைவரை லார்டு சான்சலர் (Lord Chancellor) என்று சொல்வார்கள். மக்கள் சபையில் உள்ள கடுமையான கட்டுத் திட்டமும் உறுப்பினர்களை அடக்கியாளும் அதிகாரமும் இந்தச் சபைக்கு இல்லை. காரணம் அங்குள்ள உறுப்பினர்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வார்கள் போலும்!

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி உறுப்பினர் களிடையே கருத்து வேறுபாடு இருந்தால் வாக்கெடுப்பு நிகழும். பத்தே நிமிஷத்தில் அது முடிந்துவிடும்.

இரவு பத்து மணி வரையில் சபை நடக்கும். போர்க் காலம் போன்ற சந்தர்ப்பங்களில் இரவெல்லாம் சபை நடந்ததுண்டு. சபையின் கூட்டம் முடிந்த பிறகு தலைவர் எழுந்து செல்வார். பார்லிமெண்டுக் கட்டடத்தில் உள்ள பிக்பென் என்ற கடிகாரத்துக்கு மேலுள்ள விளக்கு அணேந்துவிடும். அது ஒளி விடுமானல் உள்ளே பார்லி மெண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். - - - -

பார்லிமெண்டுக்குரிய மாளிகைக்கு வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை என்று பெயர். ஒரு காலத்தில் அரசர்கள் வாழ்ந்த இடமாதலின் அரண்மனை என்ற பெயர் பெற்றது. இப்போது பிரிட்டிஷ் அரசின் சட்டங்களைப் படைக்கும் திருக்கோயிலாக விளங்குகிறது. லண்டன் மாநகரத்தின் மேற்குப் பகுதியில் இருத்தலின் இதற்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை என்ற பெயர் வந்தது. ஆரம்ப காலத்தில்