பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 முடி மன்னர் உறங்கும் இடம்

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அடுத்துள்ள பகுதி களில் அரசின்ர் செயலகங்கள் இருக்கின்றன. அவற்ை鹰 "ஒயிட் ஹால்' என்று சொல்கிருர்கள், அவற்றிற்கு அருகில் பிரதம மந்திரியின் மாளிகை இருக்கிறது. டவுனிங் தெருவில் பத்தாம் எண்ணுள்ள இல்லம் அது. அந்த இடம் வரலாற்றுச் சிறப்புடையது. -

பிரிட்டனில் அரசரோ அரசியோ ஆட்சித் தலைவராக இருந்தாலும் மக்களின் அரசுதான் நடைபெறுகிறது. தேர்ர் தெடுக்கப்பட்ட மக்கட் பிரதிநிதிகள் அடங்கிய பார்லி மெண்டே சட்டங்களைப் படைக்கிறது. அமைச்சர் அவையே ஆட்சியை நடத்துகிறது. எனவே, அமைச்சர் குழுவின் தலைவராகிய பிரதம மந்திரியின் பதவி மிக உயர்ந்தது. அவர் வாழும் இடமாகிய டவுனிங் தெரு.பத்தாம் எண்ணுள்ள இல்லத்தைப்பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிருேம். இந்தியா பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்தபோது பிரிட்டிஷ் பிரதமரைப் பற்றியும் அவருடைய மாளிகையைப் பற்றியும் அடிக்கடி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இரண்டாவது உலகப் பெரும் போரின்போது பிரதமர் சர்ச்சில் உலகமறிந்த தலைவராக விளங்கினர். இவர் டவுனிங் தெரு இல்லத்தில் முக்கியமான ஆலோசனைகளை நடத்திய போது அந்த இல்லத்தின் பெயர் அடிக்கடி காதில் விழுந்தது.

'பிரதம மந்திரியின் இல்லத்தைப் பார்க்கப் போகலாம்' என்று அன்பர் நாகசுப்பிரமணியம் சொன்னபோது ஒரு