பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடி மன்னர் உறங்கும் இடம் . 249.

பெரிய அரண்மனையைப் பார்க்கப் போகிருேம் என்ற எண்ணமே எனக்கு உண்டாயிற்று. அகழி, மதில், மாட மாளிகைகள், கூடகோபுரங்கள் அடங்கிய பெரிய இருப்பிட மாக அது இருக்கும் என்று எண்ணினேன். ஆனல் அங்கே போய்ப் பார்த்தேன். டவுனிங் தெரு என்பது மிகச் சிறிய தெரு. அதில் ஒரு வீடு அது. தோட்டம் இல்லை, மதில் இல்லை. முகப்பில் கம்பி போட்ட வாசல். அங்கே இரண்டு காவலர் கின்றுகொண்டிருந்தார்கள். வேறு ஈ காக்கை இல்லை; சிபாரிசுக்குப் போகும் ஆட்கள் இல்லை; க்யூ வரிசை இல்லை. நாங்கள் அங்கே கின்று படம் எடுத்துக் கொண்டோம்.

நம் ஊர் மந்திரிகள் வீடு இப்படியா இருக்கும்? எத்தனை கூட்டம்! எத்தனே ஆரவாரம்! -

நாங்கள் லண்டன் போயிருந்தபோது கிதி மந்திரியாக இருந்தவர் இறந்துபோனர். அந்தச் செய்தியைப் பத்திரி கையில் பார்த்தோம். எங்கேனும் இரங்கற் கூட்டம் கடக் திருக்கலாம். மற்றப்படி நகர வாழ்க்கையில் எந்த வேறு பாடும் இல்லை; கடையடைப்பில்லை; தொழில் கிறுத்தம் இல்லை. அரசியல் தலைவர்களுக்குச் சரியானபடி மரியாதை காட்டத் தெரியாத அப்பாவிகள்! இங்கேயானல் எவ்வளவு திமிலோகப்படும்!

முடிமன்னர்களெல்லாம் முடிவில் ஒருபிடி சாம்பர் ஆவர் என்று நாம் வேதாந்தம் பேசுகிருேம். எவ்வளவு பெரிய மனிதர்களானலும் அவர்கள் இறந்த பிறகு அவர்கள் உடம்பைச் சுடுகிருேம்; அல்லது புதைக்கிருேம். அப்படி யாவரும் முடியும் இடமாகிய இடுகாட்டையோ சுடுகாட் டையோ காம் மங்கலமான இடமாக மதிப்பதில்லை; அங்கே போகவே அஞ்சுவோம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அர ண் மனே க் கு அக்கரையில் "வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே' என்ற இடம் இருக்கிறது. அதை இடுகாடு என்று சொல்லலாம்; பல மக்களே அங்கே