பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடி மன்னர் உறங்கும் இடம் 253,

துப் போற்றிய மன்னரின் அன்பு எவ்வளவு சிறந்ததாக இருக்கவேண்டும்! அரசருடைய குழந்தைகளாகப் பிறந்த, தல்ைதான் இந்தக் குழந்தைகளின் சமாதியும் சிலைகளும் இன்றும் கிலவுகின்றன. அதற்கும் ஒரு பேறு வேண்டும் போலும்! ஒரு நாளே வாழ்ந்த சோபியா என்ற குழந்தை யின் சமாதியின்மேல் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா?

"மரணம் அகாலத்தில் பறித்துக் கொண்ட லோபியா என்னும் அரசகுலத்து ரோஜா மொட்டு." -

17ஆவது நூற்ருண்டில் கவிஞர்களுக்குரிய கல்லறைகள் இங்கே அமைந்தன. 'கவிஞர் மூலே' என்ற இடத்தில் ஸ்பென்ஸர் டிரைடன், டென்னிஸன், சாசர் முதலியவர். களின் திருமேனிகள் புதையலாக விளங்குகின்றன. 18ஆவது நூற்ருண்டில் பல்வேறு வகையில் புகழ்பெற்ற பெருமக்களும் இந்த ஆலயத்தின்கீழ் நெடுந்துயில் கொள்ளத் தொடங்கினர். இலக்கிய மேதையாகிய டாக்டர் ஜான்ஸன் சமாதி இங்கே இருக்கிறது. அவருடைய நண்பரும் நடிகரு, மாகிய கேரிக்கின் சமாதியையும் இங்கே காணலாம். பல இசைப் புலவர்கள் இங்கே ஒரு பகுதியில் உறங்குகின்றனர்.

வேறு இடங்களில் சமாதி செய்யப்பெற்ற பல பெரும் புலவர்களுக்கு இங்கே கினைவுச் சின்னங்களை அமைத்தனர். 18ஆம் நூற்ருண்டில் இந்த வழக்கம் தோன்றியது. ஷேக்ஸ் பியரின் சமாதி ஆவன் நதிக்கரையிலுள்ள ஸ்ட்ராட்போர்டு என்னும் இடத்தில் இருக்கிறது. 1740ஆம் ஆண்டில் அவருடைய பெரிய சில வடிவை இங்கே கவிஞர் மூல'யில் நிறுவினர். அப்படியே க்ரிப்பின் கேட் என்ற இடத்தில் மில்ட்டனைப் புதைத்திருக்கிருர்கள். அவருடைய பாதி உருவச்சிலையை இங்கே ஓரிடத்தில் காணலாம். கிரே, வொட்ஸ்வொர்த் ஆகியவரின் சமாதிகள் வேறு வேறு இடங்: களில் இருந்தாலும் அவர்களுடைய நினைவுச் சின்னங்களே இங்கே நிறுவியிருக்கின்றனர். பல விஞ்ஞானிகளின் கினேவுக் குறிகளும் இருக்கின்றன.