பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடி மன்னர் உறங்கும் இடம் 255

போது அதை அரங்கத்தின் நடுவே கொண்டுவந்து வைப் பார்கள். இந்த ஆதனம் முதலாம் எட்வர்டின் கட்டளேப் படி மாஸ்டர் வால்ட்டர் என்பவரால் 1300ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இந்தச் சிங்காதனத்தில் ஒவ்வோர் அரச ரும் முடிசூட்டிக் கொண்டனர். ஐந்தாம் எட்வர்டுக்கும் எட்டாம் எட்வர்டு மன்னருக்கும் முடிசூட்டு விழா நடை பெறவில்லை. ஆகவே அவ்விருவரும் இந்தச் சிங்காதனத்தில் அமரும் வாய்ப்பைப் பெறவில்லை. *

இந்த ஆதனத்தின்கீழ் நான்கு சிங்கங்கள் இருக் கின்றன. இதை முதலில் செய்தபோது அவை இல்லை. எட்டாம் ஹென்றி அரசருடைய முடிசூட்டு விழாவில் அவற்றை இயற்றிச் சேர்த்தார்கள். அதற்குமுன் வெறும் ஆதனமாக இருந்த இது பின்பு சிங்காதனம் ஆகி விட்டது!

முடிசூட்டுவதற்கு முன் பல சடங்குகள் செய்கிருர்கள். எல்லா நாடுகளிலும் அந்த அந்த நாடுகளின் சம்பிரதா யத்தை ஒட்டிய சடங்குகள் இருக்கத்தான் இருக்கின்றன. அரசை ஏற்றுக்கொள்பவருக்குப் புனிதத்தைலத்தைப் பூசுவார்கள். அரசர் அமரப் பெரிய மேடையை அமைப் பார்கள். சுற்றியுள்ள இடங்களில் பிறநாட்டுப் பிரதி நிதிகளும் உள்நாட்டு மக்களும் தங்குவதற்கு இருக்கைகள் அமைப்பார்கள். காண்ட்டர்பரி ஆர்ச்பிஷப், 'இவர் அரசுரிமையை ஏற்கிருர்' என்று அறிவிப்பார். உடனே யாவரும், "மன்னர் வாழ்க!' என்ருே, 'அரசி வாழ்க!” என்ருே வாழ்த்துவார்கள்.

புனித எண்ணெயை அரசருடைய கைகளிலும் தலை யிலும் மார்பிலும் தடவுவார்கள். இதல்ை அரசருக்குச்

சிறப்பான புனிதத் தன்மை உண்டாகுமாம்.

முடிசூட்டு விழாவுக்கெனத் தனியே ஆடைகள் உண்டு. அவற்றை அணிந்துகொண்டு மன்னர் சிங்காதனத் தில் வீற்றிருப்பார். வாள், மோதிரம், செங்கோல் ஆகிய