பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானும் கடலும் 271

கால அடைவில் படங்களே வைத்திருக்கிருர்கள். அரசி இல்லம் என்ற இடத்தில் 29 அறைகளில் பழைய பொருள் களையும் ஓவியங்களையும் வைத்திருக்கிருர்கள். ஏழாம் ஹென்றி, எட்டாம் ஹென்றி, முதல் எலிஸபெத் ஆகியவர் களின் படங்களும் அவரவர் காலத்தில் இருந்த கப்பல்களின் ஒவியங்களும் இருக்கின்றன.

கப்பற் கலக்கல்லூரி ஒன்று இந்நகரில் நடைபெறு கிறது. கட்டி ஸார்க் (Cutty Sark) என்ற பழைய கப்பல் ஒன்றை இங்கே ஓரிடத்தில் வைத்திருக்கிருர்கள். சீனவி லிருந்து தேயிலை கொண்டு வருவதற்கு அது பயன் பட்ட தாம். அது மிக வேகமாக ஓடியதாம். அதன் பழைய அமைப்பைப் பார்க்க மக்கள் வருகிருர்கள். மிகப் பெரிய கப்பலான அதன்மேல் ஏறிப் பார்க்கிருர்கள்.

வேறு சிறிய கப்பல் ஒன்றை மற்ருே.ரிடத்தில் வைத் திருக்கிருர்கள். அதை ஜிப்ளி மாத் (Gipsy Moth) என்று சொல்லுகிரு.ர்கள். ஸர் ஃபிரான்ஸிஸ் சிகெஸ்டர் (Sir Frances Chichester) argårip -o/3sour Qāgā āūLaSão தனியே வெகு வேகமாக உலகம் முழுவதும் சுற்றி வந்தா சாம். 29,677 மைல்கள் அவர் பிரயாணம் செய்திருக்கிரு.ர். 226 நாள் இந்தக் கப்பலில் தொடர்ந்து அவர் பயணம் செய் தார். பிரம்மாண்டமான தேயிலைக் கப்பலேயும், இந்தக் குட்டிக் கப்பலேயும் அருகருகே வைத்திருக்கிருர்கள். பல மனிதர்கள் இயக்இய பிரம்மாண்டமான கப்பலை ஒ புறமும், ஒரு தனித்னிதன் துணிவுடன் இயக்கி உலகமெல் லாம் சுற்றிய குட்டிக் கப்பலே அதன் அருகிலும் காணும் போது இரண்டும் இரு வேறு வகையில் சிறந்து விளங்கு வதை அறிந்து வியக்கவே தோன்றும். -

கிரீன்விச்சுக்கு அருகில் தேம்ஸ் நதியின் கீழே ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. அதில் காரில் சென்று பார்த் தோம். இப்படி வேறு சில சுரங்கப் பாதைகள் இருக் கின்றனவாம். ரெயில் பாதையே தேம்ஸ் நதியின் அடியில் போகிறது.