பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கண்டறியாதன கண்டேன்

இல்லாவிட்டால் வேறு ஓர் இடத்துக்குப்போய்த் தங்கலாம். பிராங்க்பர்ட் அயல்நாட்டு ஊர் ; வேற்றுமொழி பேசும்

இடம். அங்கே எப்படி வளையவருவது?

தமிழ்நாட்டு முஸ்லிம் ஒருவர், கான் என்னும் பெய ருடையவர், பிராங்க்பர்ட்டில் கடை வைத்திருக்கிருர் என்றும், அவர் கியாயமான விலக்கு வேண்டிய சாமான் களைத் தருவாரென்றும் லண்டனில் ஒர் அன்பர் சொல்லி, அந்தக் கடைக்காரருடைய விலாசத்தையும் குறித்துத் தந்தி ருந்தார். அந்தக் கடைக்குப் போய் இறங்குவது, பிறகு எப்படிச் செளகரியமோ அப்படிச் செய்வது என்று தீர்மா னித்தோம். விமான கிலேயத்திலிருந்து கோச்சில் ஏறி நகரத் துக்குள் சென்ருேம். போகும் வழியில் ஓரிடத்தில் நூற்றுக் கணக்கான கார்கள் இருந்தன. சாலைக்குச் சற்றுத் தள்ளி வெறுவெளியாக இருந்த அந்த இடத்தில் அத்தனே கார்கள் இருப்பதற்குக் காரணம் என்ன? பக்கத்தில் வீடுகள் இல்லை: பல சாலைகள் இல்லை; எந்த விதமான கட்டிடமும் இல்லை. அப்படி இருக்க அத்தனை கார்களே அங்கே ஏன் கிறுத்தி யிருக்கிருர்கள்? விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அந்தக் கார்கள் வேண்டாமென்று கழித்த கார்கள். அவற்றைப் பார்த்தால் அப்படித் தோன்ற வில்லை. மேற்கு ஜெர்மனி மிகவும் வளமுள்ள நாடு; செல்வம் கொழிக்கும் இடம். சிறிது பழுதுபட்டாலும் காரை எறிந்துவிடுவார்கள். சிறிய காகிதமாக இருந்தால், அல்லது தாசுதும்பாக இருந்தால், எங்காவது குப்பைத் தொட்டியில் போடலாம். காரை என்ன செய்வது? அப்படிப் பயன் இல்லாத கார்களே யெல்லாம் இந்தப் பொட்டலில் கொண்டுவந்து போட்டி ருக்கிருர்கள். நம் காட்டில் காயலான் கடைக்குப் போக வேண்டிய டப்பாக்களேயெல்லாம் காரென்று ஒட்டிக் கொண்டிருக்கிற காட்சி எனக்கு கினைவு வந்தது. இந்தக் கார்களேயெல்லாம் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டால்-! அனுப்புவது என்பது சுலபமான காரியமா? ஏதாவது மந்திர ஜால வித்தை பண்ணி அனுப்பலாமா? அந்தக் கார்க் குவியலேப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். ஒதுக்குகிற