பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாற்றமும் மாற்றமும் 289

கொண்டோம். கோல்டன் ஹோட்டலில் நாலாவது மாடி யில் ஒர்அறை இருந்தது. நாங்கள் சாமான்களைத் தூக்கிக் கொண்டு அங்கே போவதானல் எத்தனை மணி ஆகுமோ? அதற்குள் என்ன ஆகுமோ? நல்ல வேளை அந்த வடஇந்திய இளைஞர் எங்கள் உதவிக்கு வந்தார். ஹோட்டல் அறை பில் சாமான்களே வைத்த பிறகு, 'உங்கள் பேர் என்ன?" என்று

படம் 19. பிராங்பர்ட் ரெயில்வே ஸ்டேஷன்

கேட்டேன். 'சாந்த் ராம்" என்ருர். நல்ல பேர். எங்கள்

குழப்பம் தீர்ந்து சாந்தி உண்டாக அவர் உதவினர். கடவுள்

இப்படித்தான் சமய த் தி ல் வேண்டிய உதவியை

அனுப்புவார் என்று நம்புகிறவன் நான். சாந்த ராமிடத்தில்

இறைவன் அருளைக் கண்டேன். அவரிடம் பணம் கொடுக்கப்

கண்டறி-19