பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கண்டறியாதன கண்டேன்

போனேன். 'அதெல்லாம் வேண்டாம், நான் இந்தக் கடையில் வேலை செய்கிறேன். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானல் அங்கே வாருங்கள்” என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார்.

அந்தச் சமயத்தில் அவர் செய்த உதவிக்கு விலை ஏது? கடவுள் தம்மை நம்பும் பக்தர்களின் பாரத்தைச் சுமக்கிருர் என்று சொல்வார்கள். இங்கே சாந்த் ராம் எங்கள் பாரத்தைச் சுமந்து நலம் செய்தார்.

அறைக்கு வந்தவுடன் கொஞ்சம் தெம்பு உண்டாயிற்று. ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று புறப்பட்டோம். அங்கே உள்ள ஆண்களும் பெண்களும் புஷ்டியாக இருந்தார்கள்; அழகாகவும் இருந்தார்கள். ஆனல் பாரிஸைப்போல மோகத்தை அவர்கள் தோற்றம் உண்டுபண்ணவில்லை, செல்வத்திலும் ஒர் அமைதி, அழகிலும் ஒரு நளினம்; சுறு சுறுப்பிலும் ஒரு சாந்தம் - இவற்றை அங்கே பார்த்தேன். பிராங்க்பர்ட்டைக் குறிக்கும்போதெல்லாம் மேன் ஆற்றங்கரையிலுள்ள பிராங்க்பர்ட் என்று குறிக்கிருர்கள். அந்த நகரத்தின் இடையே ஒடும் ஆறு மேன்.

பிராங்க்பர்ட்டில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் மிகவும் பிரம்மாண்டமானது. அங்கே நாள் ஒன்றுக்கு 12,000 வண்டிகள் வந்து போகின்றன. சிறந்த கவிஞராகிய கதேயின் நினைவுச் சின்னமும் அவர் பெயரில் ஒரு ஹாலும் இந்த நகரில் உள்ளன. கதே இங்கே பிறந்து வளர்ந்தவர். இந்த நகரத்தில் டிராம்கள் ஒடுகின்றன; மிக விரைவாக ஒடுகின்றன; சிறிதுகூடக் காலம் கவருமல் போகின்றன. இங்கே இங்கிலீஷ் பேசுகிறவர்கள் அருமை யிலும் அருமை. கடைகளில் சாமான்கள் மலிவாகக் கிடைக்கும் என்று சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக் இறேன். டிரான்ஸிஸ்டர், டேப்ரிகார்டர் முதலியவை ஒரளவு மலிவுதான். துணி முதலியவை ஆனவிலே குதிரை விஜல விற்கின்றன. இங்கே வழங்கும் காணயம் மார்க்.