பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரியில் முதல் நாள் 295

பிறகு ஒர் ஆட்டிடையன் அந்தக் குழந்தைகளை எடு க்க வளர்த்தான். ரோமுலஸ் (Romulus) என்றும், ரேமஸ் (Remus) என்றும் அந்தக் குழந்தைகளுக்குப் பெயரிட்டான்.

குழந்தைகள் வளர்ந்தார்கள். அவர்கள் ஒரு நகரத்தை அமைக்க எண்ணினர்கள். அதற்கு எல்லே கோலினர்கள். ஓர் ஏரில் ஓர் எருதையும் கன்றையும் பிணைத்து நகரத்தின் எல்லையைக் குறிக்கும் வகையில் சால் ஒட்டினர்கள். பின்பு நகரத்தை அமைத்தார்கள்.

புதிய நகரத்துக்கு என்ன பெயர் வைப்பது? சகோதரர்களில் ஒவ்வொருவனும் தன் தன் பெயரையே வைக்கவேண்டும் என்று வற்புறுத்தினன். அதனால் அவர் களிடையே போர் முண்டது. ரோமுலஸ் தன் தம்பியைக் கொன்றுவிட்டான்.

சிறுசிறு குடிசைகள் அமைந்த ஊராக அது எழுந்தது. அதற்கு ரோமா என்ற பெயரை வைத்தான் ரோமுலஸ். கி.மு. 753ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் இந்த ஊர் தோன் றியது. நாளடைவில் இது கோட்டை கொத்தளங்களும் பெரிய மாளிகைகளும் நிரம்பிய மாபெரும் நகரமாக வளர்க் தது. நகரினிடையே டைபர் என்ற ஆறு ஓடுகிறது. ரோம் நகரம் ஒரு காளில் கட்டி முடியவில்லை'என்று ஒரு பழமொழி உண்டு. அவ்வக்காலத்தில் இங்கே ஆண்ட மன்னர்கள் புதிய புதிய இடங்களே அமைத்தார்கள். பகையும் அதன் விளைவாகப் போரும் எழுந்த காலங்களில் பல இடங்கள் அழிந்தன. இடிபாடுகள் அங்கங்கே தோற்றம் அளித்தன. வரலாற்றினிடையே ஏற்றமும் இறக்கமும் அடுத்தடுத்து வருவதை ரோம் நகரில் உள்ள சின்னங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

ஜூலியஸ் சீசர் இந்த நகரில் மாமன்னகை இருந்து அரசாண்டான். அவன் கி. மு. 44-இல் கொலையுண்டான். அவனுடைய உறவினகிைய ஆக்டேவியன் பிறகு அரியணை யேறினன். கி. மு. 23இல் அவன் அகஸ்டஸ் என்ற