பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரியில் முதல் நாள் 297

கரிபால்டி என்ற வீரர் தோன்றினர். இன்று இத் தாலிய நாட்டில் அவரைப் பெருமதிப்புடன் கொண்டாடி வருகிருர்கள். அவருடைய தியாகத்தாலும் பெருமுயற்சியாலும் ரோமானியக் குடியரசு உருவாகியது, 1929 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத் தின்படி போப் பாண்டவருக்குத் தனியே சர்ச்சையும் அதைச் சூழ்ந்த காட்டுப் பகுதியையும் ஒதுக்கி அவற்றை அளித்தார்கள். ஆட்சிபுரியும் உரிமை அவருக்குக் கிடைத்தது. அந்த இடமே வாட்டிகன் (Vatican) என்ற பெயருடன் வழங்குகிறது.

1870ஆம் ஆண்டில் ரோமாபுரியின் ஜனத்தொகை 2,60,000ஆக இருந்தது. இப்போது இருபத்தைந்து லட்சத்துக்கு மேல் போய்விட்டது. இத்தாலியில் பல சிறந்த நகரங்கள் உள்ளன. நேபிள்ஸ், வெனிஸ் முதலிய இடங்கள் வரலாற்றுச் சிறப்புடையவை. கேபிள்ஸைப் பார்த்துவிட்டுப் பிறகு செத்துப்போ’ என்று ஒரு பழமொழி உண்டு. நாங்கள் செத்துப் போகவும் தயாராக இல்லை; கேபிள்ஸைப் பார்க்கவும் இல்லை. ரோமாபுரியில் சில பகுதி களத்தான் பார்த்தோம். வரலாற்றுச் சிறப்புடைய ஒரு பேரரசு ஓங்கியும் சரிந்தும் வாழ்ந்த மாநகரத்தின் ஒவ்வோரிடமும் வரலாற்றின் ஒர் ஏடுபோல விளங்குகிறது. மனிதனுடைய ஆயுள் சிறிதுதான் என்ருலும் பல மனிதர்கள் சேர்ந்து பரம்பரை பரம்பரையாக வளர்த்து வரும் நாகரிகமும் அதன் அடையாளங்களும் எவ்வளவு பிரம்மாண்டமாக வடிவு கொண்டு நம்மைப் பிரமிக்க வைக்கின்ற்ன!

ரோமாபுரியிலும் அதைச் சுற்றிலும் உள்ள காட்சிகளைப் பயணிகளுக்குக் காட்டும் தொண்டைச் செய்யும் சில கிறுவனங்கள் ரோமில் உள்ளன. மேல்நாட்டில் அத்தகைய கிறுவனங்கள் பலபல இருக்கின்றன. காட்சிகளைக் காணு வதற்கு வரும் அயல்நாட்டினரைக் கவரும் வகையில் விளம்பரம் செய்கிருர்கள் வழிகாட்டிகளும் விளக்க நூல் களும் வெளியிடுகிருர்கள். வெவ்வேறு மொழியில் விளக்கம்