பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரியில் முதல் நாள் 299

, அங்கே ஒரே ஒளி வெள்ளம். அதனிடையே அருவிகள் ஒரு பக்கம்; மேல் நோக்கி எழும்பி விழும் ருேற்றுக்கள் எங்கே பார்த்தாலும் உள்ளன. மலைமேல் ஏறியும் இறங்கியும் அந்தக் காட்சிகளைக் கண்டோம். மலைப் பக்கங்களில் அழகிய சிற்பங்களை வடித்திருக்கிருர்கள்.

மலையில் ஓடிவரும் ஆற்றைத் தடுத்து இந்த அழகிய ர்ேச் சித்திரங்களே அமைத்திருக்கிருர்கள், ஊற்றுக்கள் பல வடிவில் எழும்பி விழுகின்றன. சாமரை வீசுகின்றன சில. கம்பியாய் நீண்டு விழுகின்றன. சில. செடி போல விரிந்து விழுகின்றன. சில. ஒரிடத்தில் குடை போல ஒரு கட்டடம். அதில் பாதிப் பகுதியில் மாலைகளைத் தொங்க விட்டதுபோல விளிம்பிலிருந்து நீர்த்தாரைகள் விழு கின்றன. நடுவிலுள்ள கம்பத்தைச் சுற்றி நனேயாமல் நடந்து செல்லலாம்.

பாதைகளின் ஒரக் கால்களில் செடிகளும் மலர்களும் அவற்றின் இடையிடையே ஊற்றுக்களும் தண்ணீர் விழும் இடங்களின் கீழே விளக்குகளும் இருக்கின்றன. வெளிச்சம் அதிகமாகத் தெரியாமல் மேலே மறைத்து, நீரூற்றுக்களிலும் ஓடைகளிலும் ஒளி விழுந்து நன்கு காணும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிருர்கள். இரவிலே ஏதோ கனவுலகத்தில் நடப்பதுபோல இருந்தது.

விளக்கம் சொல்பவர் அங்கங்கே கின்று விளக்குகிருர், வேறிடத்துக்குப் போகும்போது கூட்டமாகப் போகிருேம். கிற்க வேண்டிய இடத்தில், எல்லாரும் வந்துவிட்டார்களா என்று பார்த்த பிறகே அவர் தம் விளக்கவுரையைத் தொடங்குகிருர். எங்கள் இருவரையும் அவர் நன்கு இனம் கண்டுகொள்கிருர், அங்கங்கே கிற்கும்போது இருளும் ஒளியும் கலந்த அந்த இடத்தில், "அந்த இந்தியர்கள் வந்து விட்டார்களா' என்று விசாரிக்கிருர். அந்த அன்பைக் கண்டு எங்கள் உள்ளம் பூரிக்கிறது.