பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுக்கு விருந்து 303

உருவத்தையும் இப்போதுள்ள உருவத்தையும் ஒன்றன் மேல் ஒன்ருக வைத்துப் பார்த்து மகிழும்படி வெளியிட் டிருக்கிருர்கள். -

அவர்கள் அந்தச் சின்னங்களைச் சிரத்தையுடன் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதைப் பார்த்தால் காப்பவன்தான் பெரியவன் என்று தோன்றும்.

கலோளியம் என்ற இடம் ஒன்று ரோமில் இருக்கிறது, பிரம்மாண்டமான வட்ட மாளிகை அது. இப்போது சிதைந்த வடிவில் காட்சி தருகிறது. ஒன்பதாண்டுக் காலம் அந்த வட்ட மாளிகையைக் கட்டினர்களாம். கி.பி. 80ஆம் ஆண்டு அது கட்டி நிறைவேறியது. போட்டிப் பந்தயங்களும் விலங்கு வேட்டைகளும் இந்த மாளிகையின் உள்முற்றத்தில் கடக்குமாம். ரோமாபுரி எரியும்போது வீணே வாசித்தாளும் நீரோ என்ற மன்னன். அவனுடைய சிலே உருவம் மாளிகையின் முன்றிவில் இருந்ததாம். காலு தளமுள்ள மாளிகை அது. கீழ் மூன்று தளங்களும் வளைவு வாயில்கள் அடங்கியவை. மேலுள்ள காலாவது தளம் நீண்ட சதுரமான சாளரங்களே உடையது. ஐம்பதியிைரம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து உள்ளே முற்றத்தில் நடை

பெறும் காட்சிகளைப் பார்ப்பார்களாம். -

வட்டவடிவமாகிய இந்த மாளிகையின் உள்ளே நடுவில் விரிந்த வட்டமான முற்றம் இருந்தது; அங்கேதான் விலங்கினங்களை ஒன்றின்மேல் ஒன்றைப் பாயவிட்டு வேடிக்கை பார்ப்பார்களாம். வலிமை மிக்க வீரர்கள் விலங்கினங்களோடு போராடி வெற்றி பெறுவார்கள். வேலும் வாளும் கொண்டு போராடுகையில் வெறிமூண்ட விலங்குகள் உயிருக்கு அஞ்சி முழு வலிமையோடும் எதிர்க்கும். இந்த வாழ்வு மரணப் போராட்டத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சியைக் கண்டார்கள் அக்காலத்து ரோமாபுரி மாசனங்கள்!

Ur; fluor (The Pantheon) arcărp g|Léopâû பார்த்தோம். அது சிதையாத வடிவத்துடன் கிற்கிறது.