பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கண்டறியாதன கண்டேன்

வரையில் நடைபெற்றது. நாங்கள் 11-ஆம் தேதி மாலேயே பாரிஸ் போய்விட்டோம். 12-ஆம் தேதிமுதல் மூன்று நாட்கள் நகரில் பல இடங்களுக்குச் சென்று கண்டு களிக்கலாம் என்று திட்டமிட்டோம்.

12-ஆம் தேதி காலேயில் ஐந்து மணிக்கே எழுந்து ரோடினேன். பின்பு அநுஷ்டானங்களே முடித்துக் கொண்டேன். வழக்கமாக நான் உடுக்கும் கதர் வேட்டி தான் உடுத்தேன். மேலே பனியனும் காட்ஸ்வுல் ஷர்ட்டும் அணிந்தேன். காலில் ஸாக்ஸும் ஷஅவும் போட்டுக் கொண்டேன். பெரும்பாலும் இந்தக் கோலத்தில்தான் மேலே நாடுகளில் உலவினேன். மேலே ஒரு வங்காளச் சால்வையைப் போட்டுக்கொண் டிருந்தேன். குளிர் இல்லாமையால் பல சமயங்களில் அதை அங்கவஸ்திரம் மாதிரி மடித்துப் போட்டுக்கொண்டேன். நெற்றியில் திருறுேம் கழுத்தில் உருத்திராக்க மாலையும் மாருமல் எங்கும் போய் வர முடிந்தது.

திங்களன்று காலேயில் நகரத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். வீதிகளில் இருமருங்கும் நடைபாதைகள். அந்த நடைபாதைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். இடையில் சாலேயில் ஒரே கார் வெள்ளம். பெரும்பாலும் எல்லா ரோடுகளும் ஒரு வழிப்பாதைகளே. அங்கங்கே சந்திகளில், தாமே இயங்கும் அடையாள விளக்குகள். நடக்கிறவர்கள் இப்போது பாதையைக் கடக்கலாம் என்பதை அந்த விளக்குகள் காட்டின. ஒழுங்காகவும் அமைதியாகவும் மக்கள் நடந்தார்கள். அவர்களுடைய நடையில்தான் எத்தனை வேகம் முதியவர்களும் விரைவாக நடந்தார்கள்.

ஆணும் பெண்ணுமாகக் கை கோத்துக்கொண்டும் இடுப்பைத் தழுவிக்கொண்டும் கடந்தார்கள். 'காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்' என்ற அப்பர் சுவாமிகள் பாடல் கினேவுக்கு வந்தது. பருவ