பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 கண்டறியாதன கண்டேன்

றேன். அதில் படிகள் இல்லை. அது தொடங்கும் இடத்தில் நடுவே ஒன்றரை ஆள் உயரத்தில் ஒரு பெரிய கிண்ணம் போன்ற அமைப்பைப் பளிங்குக் கல்லால் செய்து வைத் திருக்கிருர்கள். கீழிருந்தும் சுழல் பாதையிலிருந்தும் அந்தக் கிண்ணத்தில் காசை வீசு எறிகிருர்கள். கிண்ணத் துக்குள் விழுந்தால் அதிர்ஷ்டம் என்று நம்பு கிருர்கள்; மூட நம்பிக்கை உலகில் எங்கேதான் இல்லை?

சுழல்பாதையின் வழியே மேலே போனுல் நீள நீளமான கூடங்களில் பல வகை ஓவியங்களும் சிற்பங்களும் ஒவியம் திட்டிய கம்பளங்களும் இருக்கின்றன. மைகேலாஞ்சலோ முதலிய பெயர் பெற்ற ஓவியர்களின் படைப்புக்கள் அவை. பைபிள் கதைகளைக் காட்டும் சித்திரங்கள் கிரம்ப உள்ளன.

எலிஸ்டைன் சேபல் என்னும் இடத்தில் போப்பாண்ட வரைத் தேர்ந்தெடுக்கும் பெரிய மண்டபம் இருக்கிறது. மிகவும் உயரமான இடம் அது. அங்கே விதானத்தில் இறைவன் கியாயத்தீர்ப்பு வழங்கும் காளின் ஓவியம் இருக் கிறது. ஏசு கிறிஸ்துவும் கன்னி மேரியும் ஒரு புறம் காட்சி அளிக்கிருர்கள். -

பழங்காலத்தில் போப்பாண்டவரின் தேர்தலில் பாதிரி களும் ரோமாபுரி மக்களும் கலந்துகொண்டார்கள். பதவி யும் பணமும் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களைப் போப்பாண்டவராக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள், அதனால் பல தீங்குகள் விளைந்தன. தெய்வத் திருத்தலத் தில் மக்களின் விருப்பு வெறுப்பும், அதிகாரத்தைத் தவருக உபயோகப்படுத்தும் வழக்கமும் இருந்தால் அது முறை யாகாது. நாளடைவில் இந்தத் தேர்தலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் உலகம் முழுவதிலுமுள்ள சமய குரவர்கள் ஒன்றுசேர்ந்து தேர்ந்தெடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.

பதவியில் இருக்கும் போப்பாண்டவர் இறந்துபோல்ை ஆதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். பழைய தலைவர்