பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகை காட்டும் முடிவு 3.19

காலமானதற்குப் பதினைந்துநாள் கழித்தே இந்தத் தேர்தல் நடைபெறும். உலகில் பல மூலைகளில் இருக்கும் சமய குரவர்களும் வத்திகனுக்கு வந்து கலந்து கொள்ள வேண் டும் என்ற எண்ணத்தில்ை இப்படி வைத்திருக்கிருர்கள். பதினெட்டு நாட்களுக்குள் இந்தத் தேர்தல் நடைபெற வேண்டும்.

குறிப்பிட்ட நாள் மாலையில் பிரதிகிதிகளாகிய சமய குரவர்கள் (Cardinals) ஒவ்வொருவரும் ஒரு செயலாளர், ஒர் ஊழியர் தம்மோடு வர இந்த மண்டபத்துக்கு வருவார் கள். எல்லோரும் வந்தவுடன் கதவுகளைச் சாத்தி விடுவார் கள். ஏதாவது வேண்டுமானல் வெளியே காவலாக நிற்ப வர்கள் மூலமாகத்தான் பெறவேண்டும், மிகவும் பாது காப்பாகவும் இரகசியமாகவும் இந்தத் தேர்தல் நடை பெறும்.

மறுநாள் காலையில் தேர்தலுக்குரிய ஒழுங்குகள் தொடங்கும். மூன்று வகையாக இந்தத் தேர்தல் நடப்ப துண்டாம். எல்லாரும் சேர்ந்து, இறையருள் கூட்டுவித்தது போல ஒருவரையே குறிப்பிட்டு அவரையே தேர்ந்தெடுப் பது ஒரு வகை. தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய சமய குரவர்கள் தங்களுக்குள் சிலரைப் பொறுக்கி ஒரு குழு வாக்கி, அவர்களேயே தம் தலைவரைத் தேர்ந்தெடுக்கச் செய் வதும் உண்டு. அந்தச் சிறு குழுவினர் ஒருவாறு தேர்தலுக் குரியவர்களோடு பேசிச் சமாதானப்படுத்தி ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இரண்டு வகையிலும் வாக்கு எடுத்து முடிவு செய்யும் தேர்தல் முறை இல்லை. மூன்ருவதுதான், ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான வருக்கு வாக்களித்துக் தேர்ந்தெடுப்பது. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுபவரே போப்பாக த் தேர்ந்தெடுக்கப்பெறுவார். பீட்டரின் பிரதிநிதியாகவும் கிறிஸ்து பெருமானின் அன்புக்குரியவராகவும் அவ்ர். ..விளங்குவார். ஒவ்வொரு பிரதிநிதியின் இருக்கைக்கும் மேலே விதானம் இருக்கும். தேர்தல் நடந்து முடிவு திெக்