பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கண்டறியாதன கண்டேன்

மகிழ்ச்சியும் உண்டாயின. சொந்த ஊரையும், அங்குள்ள பொறுப்புக்களையும், கவலைகளையும் மறந்து வழியிலே வியப்பு மிதக்கப் போக்கிய அந்தப் பொழுதுகளே இப்போது கினைத்தாலும் இன்பமாக இருக்கிறது. அங்கே போனது. பார்த்தது எல்லாம் கனவோ என்ற பிரமை ஏற்படுகிறது. எவ்வளவு ஆண்டுகளானலும் அந்தக் காட்சிகளில் உண்டான புதுமை உணர்ச்சி போகாது.

பெய்ரூத்தில் காலையில் எழுந்து நீராடினேன். ரோடின வுடன் ஜபம் செய்வதை நான் விடுவதில்லை. எந்த ஊராக இருந்தால் என்ன? தண்ணிர் இருக்கிறது. தங்கும் இடம் இருக்கிறது. மனம் இருக்கிறது. அன்று ஜபம் செய்து விட்டுக் காலேயில் ரொட்டி உண்டேன். மேல்காடுகளில் பழப்பாகாகிய ஜாம் கொடுப்பார்கள். இங்கே தேன் வைத்தார்கள்.

சிற்றுண்டி உண்டு வெளியில் புறப்பட்டோம். மாலையில் தான் நாங்கள் செல்ல வேண்டிய விமானம் புறப்படு: மாதலால் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க எண்ணினேம்.

பெய்ரூத் என்பது லெபனன் காட்டின் தலைநகரம். இஸ்ரேல் நாட்டினர் விமானத் தாக்குதலை நடத்தினர்கள் என்று சமீபத்தில் அந்த நகரைப்பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. காங்கள் சென்றிருந்தபோது ககரம் அமைதியாக இருந்தது. அது சிறிய நகரங்தான். பஸ்கள் உண்டு. முன்பு டிராம் இருந்ததாம். இப்போது எடுத்துவிட்டார்கள். உலகத்தில் எல்லா நாடுகளிலுமே பழைய நாகரிகத்தின் சின்னங்களாக இருந்த டிராம்கள் மறைந்து வருகின்றன. சென்னையிலும் பம்பாயிலும் முன்பு டிராம்கள் இருந்தன. இப்போது மறைந்துவிட்டன.

பெய்ருத்தில் ஏராளமான டாக்ளிகள் இருக்கின்றன. எல்லாம் சிவப்பு எண்களைத் தாங்கியுள்ளன. வெளிநாட்டுக் காரர்களை டாக்ளிக்காரர்கள் கையைப் பிடித்து இழுக்காத

ஆகுறையாக வலிந்து அழைக்கிருர்கள். அப்படியே