பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற சந்திரன் 33

போகிருேமே! அங்கே? ஊஹஅம்! கூடிய வரைக்கும் கடந்து சென்று இடங்களைப் பார்த்தோமோ, பிழைத் தோமோ இல்லையானல் எங்கள் கையில் இருந்த பணத்துக்கும் பாரிஸுக்கும் வெகு தூரம்!

அறைக்கு வந்தேன். 'அப்பாடா!' என்று படுக்கையில் படுத்தேன். குளியலறைக்குச் சென்று குடாக வெங்ைேரக் காலில் பாய்ச்சிக்கொண்டேன். ஆறுதலாக இருந்தது.

இருட்டிவிட்டது. வெளியில் எட்டிப் பார்த்தேன். வானத்தில் திங்கள் ஒளி வீசியது. கிமிர்ந்து பார்த்தேன். இது என்ன ஆச்சரியம்! பாரிஸுக்கென்று தனியே ஒரு நிலவா என்று வியந்தேன். அன்று அஷ்டமி. சந்திரனைச் சரிபாதியாக வெட்டி நெட்டுக்குத்தலாக கிமிர்த்தி நேரே வைத்திருந்தது வானத்தில், நம் நாட்டில் சில சமயம் தென்கோடு உயர்ந்திருக்கும். இங்கே வில்லை நேரே கிறுத்தி வைத்தாற்போல, அப்பளத்தைச் சரிபாதியாக ஒடித்து கிறுத்திற்ைபோல, அஷ்டமி சந்திரன் கின்றிருங் தான். "ஆl பாரிஸ் சந்திரன் கிமிர்ந்து கிற்கிருன்!' என்று வியந்து அதைப் பார்த்துக்கொண்டே கின்றேன்.

கண்டறி-3