பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கண்டறியாதன கண்டேன்

உணவுக்குப் பின் இந்திய மாணவர் இல்லம் சென்ருேம்: அங்கே மகாகாட்டுக்கு வந்திருந்த நண்பர்களைக் கண்டோம். புதுச்சேரியிலிருந்தும் வேறு இடங்களிலிருந்தும் வந்திருந்த பல மாணுக்கர்களைக் கண்டோம். ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை மாணவர்களிடம் சொன்னேம். டாக்ஸியில் சுற்றுவதானல் எத்தனை பணம் இருந்தாலும் போதாது. ரெயிலிலும், பஸ்ஸிலும் போவதானல் வழிகாட்டி வேண்டும். 'யாரேனும் எங்களுடன் வந்து வழிகாட்டில்ை பார்க்கக்கூடிய அளவுக்குக்குச் சில பகுதிகளேயேனும் பார்க்கலாம்' என்றேன். மாணவர் திரு ஜமால், 'கொஞ்சம் பொறுங்கள், ஓர் அன்பருடைய காரைக் கேட்கிறேன். அது கிடைத்தால் நீங்கள் செளகரியமாகப் பல இடங்களுக்கும் போய் வரலாம்' என்ருர், 'அப்படியால்ை பருத்தி புடைவையாய்க் காய்த்தது போலாகும்" என்று மகிழ்ச்சியும் நன்றியும் பொங்கக் கூறினேன். சிறிது நேரத்தில் தம்பி என்ற மாணவர் தம்முடைய காருடன் அங்கே வந்தார். "இதில் ஏறுங்கள்; இவர் எல்லா இடங் களையும் காட்டுவார். நான் வர முடியாத கிலேயில் இருக் கிறேன்' என்று சொல்லி எங்களே ஏற்றிவிட்டார் ஜமால்.

திரு தம்பி என்பவர் புதுச்சேரிக்காரர். அவருடைய தாய் தந்தையர் பாரிஸுக்கு வந்து பல ஆண்டுகள் ஆயினவாம். தந்தையார் வேறு நாட்டில் வேலை பார்க்கிரு.ர். தாயார் குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டு பாரிஸில் வாழ்கிருர். தம்பிக்குத் தமிழ் பேச வரவில்லை. ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் நன்ருகப் பேசினர். அவருடன் மற்ருெரு மாணவரும் எங்களுடன் வந்தார்.

கார் வெகு வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. எத்தனையோ இடங்களைக் காட்டிக்கொண்டே சென்ருர்கள். வின் நதியைப் பார்த்தோம். அதன் கரையிலே சிறிது தூரம் சென்ருேம். ஸின் நதியின்மேல் பல இடங்களில் அழகான பாலங்களைக் கட்டியிருக்கிருர்கள். அலெக்ஸாண்டர் பாலம்